ஐபிஎல் 2024: ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்ஸியை பாராட்டிய சுனில் கவாஸ்கர்!

Updated: Sat, Mar 23 2024 13:53 IST
ஐபிஎல் 2024: ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்ஸியை பாராட்டிய சுனில் கவாஸ்கர்! (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக பார்க்கப்படும் மகேந்திர சிங் தோனி நடப்பு ஐபிஎல் சீசனில் தனது கேப்டன் பதவியிலிருந்து விலகியதுடன், தனக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக இளம் அதிரடி வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

அதன்படி நேற்றைய போட்டியின் போது சிஎஸ்கே அணியின் கேப்டனாக வழிநடத்திய ருதுராஜ் கெய்க்வாட் தனது முதல் போட்டியிலேயே வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளார். இதன்மூலம் மகேந்திர சிங் தோனிக்கு பிறகு கேப்டனாக தனது அறிமுக போட்டியிலேயே வெற்றிகண்ட சிஎஸ்கே கேப்டன் எனும் பெருமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக சுரேஷ் ரெய்னா, ரவிந்திர ஜடேஜா போன்றோர் சிஎஸ்கே அணியை வழிநடத்தினாலும் அவர்கள் தங்களது முதல் போட்டியில் வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையடுத்து சிஎஸ்கே கேப்டனாக தனது முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ள ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்துவருகிறது. இந்நிலையில் சிஎஸ்கே கேப்டனாக சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட்டை முன்னாள் ஜாம்பாவன் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு வீரருக்கும் கேப்டனாக தங்களது அறிமுகம் என்பது மிகவும் முக்கியமானது. 

அதன்படி ஒவ்வொரு வீரரும் தங்களது கேப்டன்சியை வெற்றியுடன் தொடங்க விரும்புவார்கள். அந்தவகையில் ருதுராஜ் கெய்க்வாட் அந்த தொடக்கத்தைப் பெற்றுள்ளார். அவரது பந்துவீச்சு மாற்றங்கள் அற்புதமாக இருந்தது. அதிலும் குறிப்பாக முஸ்தஃபிசூர் ரஹ்மானை கையாண்ட விதம் மிகவும் அருமையாக இருந்தது. அதுமட்டுமின்றி தீபக் சஹாரை மாற்றிய விதம், துஷார் தேஷ்பாண்டேவிற்கு கடைசி ஓவரை கொடுதது என அனைத்தும் செயல்பாடுகள் சிறப்பாக அமைந்தது.

ஏனெனில் அதற்கு முந்தைய ஓவரில் தான் தேஷ்பாண்டே 25 ரன்களை கொடுத்தார் என நினைக்கிறேன். இதனால் கடைசி ஓவரை வேறு யாருக்காவது கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் மீது நம்பிக்கை வைத்து கடைசி ஓவரை கொடுத்தார். அதற்கேற்றது போல் தேஷ்பாண்டேவும் கடைசி ஓவரை அபாரமாக வீசி அசத்தினார். இதனால் இப்போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட்டின் கேப்டன்சி மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாக அமைந்தது” என்று பாராட்டியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை