சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்டது. இதில் இந்திய அணியின் விராட் கோலி 836 புள்ளிகளிடன் 2 ஆவது இடத்தில் உள்ளார்.
Advertisement
அதேபோல் மற்றொரு இந்திய வீரரான ரோஹித் சர்மா 801 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் உள்ளார். மேலும் இப்பட்டியளில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் முதலிடத்தில் நீடித்து வருகிறார்.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அதிரடியான அட்டத்தை வெளிப்படுத்திய குயின்டன் டி காக் இப்பட்டியலில் 4 இடங்கள் முன்னேறி 5ஆம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.
இதே போல் டி20 போட்டி பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இலங்கை அணியின் வனிந்து ஹசரங்கா முதல் இடத்திலும், தென் ஆப்பிரிக்க அணியின் தப்ரைஸ் ஷம்ஸி 2ஆவது இடத்திலும், இங்கிலாந்தின் ஆதில் ரஷித் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.