ஐசிசி உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 20ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

Advertisement

அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் குயின்டன் டி காக் 4 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த ரீஸா ஹென்றிக்ஸ் - ரஸ்ஸி வேண்டர் டூசென் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர்.

Advertisement

அதன்பின் 60 ரன்களில் வேண்டர் டுசென் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரீஸா ஹென்றிக்ஸ் 85 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் மார்க்ரம் - ஹென்ரிச் கிளாசென் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

தொடர்ந்து 44 ரன்களில் ஐடன் மார்க்ரம் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட, அடுத்து வந்த டேவிட் மில்லரும் 5 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து கிளாசெனுடன் இணைந்த மார்கோ ஜான்செனும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் ராக்கெட் வேகத்தில் உயரத்தொடங்கியது.

இதில் பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசி இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கிய ஹென்ரிச் கிளாசென் 61 பந்துகளில் தனது முதல் உலகக்கோப்பை சதத்தைப் பதிவுசெய்ய, மறுப்பக்கம் தனது பங்கிற்கு அதிரடி காட்டிய மார்கோ ஜான்செனும் 35 பந்துகளில் தனது முதல் அரைசதத்தைக் கடந்து அசத்தினார். 

அதன்பின்னும் அதிரடியாக விளையாடி வந்த ஹென்ரிச் கிளாசென் 12 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 109 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த மார்கோ ஜான்சென் 3 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 75 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இங்கிலாந்து அணி தரப்பில் ரீஸ் டாப்லி 3 விக்கெட்டுகளையும், கஸ் அட்கின்சன், ஆதில் ரஷித் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

Advertisement

இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்களைக் குவித்தது. இதையடுத்து 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது.     

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News