ஒவ்வொரு டெஸ்ட் போட்டியின் முடிவிலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளது. அந்தவகையில் இம்முறை டெஸ்ட் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாகவே ஐசிசி டெஸ்ட் வீரர்களின் புதுப்பிக்கப்பட்ட தரவரிசையை இன்று வெளியிட்டுள்ளது. 

Advertisement

அதன்படி பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து வீரர்கள் ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் ஆகியோர் முதலிரண்டு இடங்களைத் தக்கவைத்துள்ளனர். மேற்கொண்டு மூன்றாம் இடத்தில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் தொடர்கிறார். மேலும் நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் ஒரு இடம் முன்னேறி 4ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். 

Advertisement

முன்னதாக நான்காம் இடத்தில் இருந்த இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு இடம் பின் தங்கி 5ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதுதவிர்த்து 9ஆம் இடத்தில் இருந்த ரிஷப்  பந்து இரண்டு இடங்கள் பின் தங்கி 11அவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இருப்பினும் இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்திய ஸ்டீவ் ஸ்மித் ஒரு இடம் முன்னேறி மீண்டும் 10 இடத்திற்குள் நுழைந்துள்ளார். 

இந்த பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ஷுப்மன் கில் 4 இடங்கள் பின் தங்கி 20ஆவது இடத்திற்கும், விராட் கோலி ஒரு இடம் பின் தங்கி 21ஆவது இடத்திற்கும், பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பில் வரும் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா 5 இடங்கள் பின் தங்கி 35ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். அதேசமயம் டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். 

அதேசமயம் அவர் தற்போது 904 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை தக்கவைத்துள்ளார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக புள்ளிகளைப் பெற்ற இந்திய பந்துவீச்சாளர் எனும் அஸ்வினின் சாதனையை ஜஸ்பிரித்  பும்ரா சமன்செய்துள்ளார். முன்னதாக சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த 2016ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 904 புள்ளிகளை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இந்த பட்டியலில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்  5ஆம் இடத்தில் தொடரும் நிலையில், 6ஆம் இடத்தில் இருந்த ரவீந்திர ஜடேஜா 4 இடங்கள் பின் தங்கி 10ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மேற்கொண்டு டெஸ்ட் ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா முதலிடத்திலும், வங்கதேசத்தின் மெஹிதி ஹசன் இரண்டாம் இடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் மூன்றாம் இடத்திலும் தொடர்கின்றனர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News