நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இன்றுடன் நடந்து முடிந்துள்ளது. இத்தொடரின் முடிவில் நியூசிலாந்து அணியானது 4-1 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்று அசத்தியுள்ளது.

Advertisement

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 வீரர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலின் முதல் 10 இடங்களில் எந்த மாற்றமும் நிகழவில்லை. இதில் முதலிடத்தில் டிராவிச் ஹெட் முதலிடத்திலும், இந்திய வீரர் அபிஷேக் சர்மா இரண்டாம் இடத்திலும், இங்கிலாந்தின் பில் சால்ட் மூன்றாம் இடத்திலும் தொடர்கின்றனர். 

Advertisement

இதுதவிர்த்து இந்திய அணியைச் சேர்ந்த திலக் வர்மா 4ஆம் இடத்திலும், சூர்யகுமார் யாதவ் 5ஆம் இடத்திலும் தொடர்கின்றனர். மேற்கொண்டு பாகிஸ்தான் டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து தொடக்க வீரர் டிம் செஃபெர்ட் 13ஆம் இடத்தில் தொடரும் நிலையில், அந்த அணியின் மற்றொரு தொடக்க வீரர் ஃபின் ஆலன் 2 இடங்கள் முன்னேறி 16ஆம் இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேற்கொண்டு டி20 பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையிலும் முதல் 5 இடங்களில் எந்த மாற்றமும் இல்லை. வெஸ்ட் இண்டீஸின் அகீல் ஹொசைன் முதலிடத்திலும், இந்திய அணியின் வருன் சக்ரவர்த்தி இரண்டாம் இடத்திலும், இங்கிலாந்தின் ஆதில் ரஷித் மூன்றாம் இடத்திலும் தொடரும் நிலையில், இலங்கை அணியின் வநிந்து ஹசரங்கா 4ஆம் இடத்தையும், ஆஸ்திரேலியாவின் ஆடம் ஸாம்பா 5ஆம் இடத்திலும் தொடர்கின்றனர். 

நடந்து முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டஃபி 7 இடங்கள் முன்னேறியுள்ளார். மேற்கொண்டு பாகிஸ்தான் அணியின் ஹாரிஸ் ராவுஃப் 11 இடங்கள் முன்னேறி 15ஆவது இடத்திற்கும், ஷாஹீன் அஃப்ரிடி ஒரு இடம் முன்னேறி 28ஆம் இடத்திற்கும், அப்பாச் அஃப்ரிடி 8 இடங்கள் முன்னேறி 36ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இதுதவிர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான ஆல் ரவுண்டர் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா தொடர்ந்து முதலிடத்தில் தொடர்கிறார். இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் நேபாளின் திபெந்திர சிங் ஐரீ இரண்டாம் இடத்திலும், ஆஸ்திரேலிய அணியின் மார்கஸ் ஸ்டொய்னிஸ் மூன்றாம் இடத்திலும், இங்கிலாந்தின் லியாம் லிவிங்ஸ்டோன் 04ஆம் இடத்திலும் தொடர்கின்றனர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News