டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் சமீபத்தில் மோதின. பெரும் விறுவிறுப்புடன் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.

Advertisement

இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய காரணம், விராட் கோலி எனும் தனி நபர் போராட்டம் தான். ஒற்றை ஆளாக களத்தில் தூண் போல நின்ற விராட் கோலி 53 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 82 ரன்களை விளாசினார். குறிப்பாக கடைசி 2 ஓவர்களில் அவர் காட்டிய அதிரடி இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது.

Advertisement

இந்நிலையில் அந்த ஒரு போட்டியில் கோலி காட்டிய அதிரடி ஐசிசி தரவரிசைப் பட்டியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐசிசி வெளியிட்டுள்ள புதிய டி20 பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியலில், 15ஆவது இடத்தில் இருந்த விராட் கோலி 5 இடங்கள் முன்னேறி 9ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஒரு வீரர் முதல் இன்னிங்ஸின் போது விளையாடுவதை விட சேஸிங்கின் போது சிறப்பாக விளையாடும் போது அதிகப்படியான ஐசிசி புள்ளிகள் கிடைக்கும். அதன் அடிப்படையில் தான் விராட் கோலி 5 முன்னணி வீரர்களை முந்திக்கொண்டு டாப் 10 வரிசைக்குள் இடம்பிடித்துள்ளார்.

இந்த தரவரிசைப்பட்டியலில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வே 2ஆவது இடத்திலும், 3ஆவது இடத்தில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவும் இடம்பிடித்துள்ளனர். இந்த டி20 உலகக்கோப்பை மூலம் பெரிய மாற்றங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News