சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. கடந்த 2 ஆம் தேதி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் முறையாக முதல் இடத்திற்கு முன்னேறி இருந்த சூர்யகுமார் யாதவ் (890 புள்ளிகள்) தற்போது அதை தக்கவைத்துள்ளார்.

Advertisement

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அதிரடி சதம் விளாசி இருந்த சூர்யகுமார் 31 புள்ளிகள் கூடுதலாக பெற்று 890 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் 836 புள்ளிகளுடன் இந்த பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார்.

Advertisement

அதே நேரத்தில் மூன்றாவது இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் 4ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். நியூசிலாந்தின் டெவோன் கான்வே 3ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களில் இந்திய வீரர்களில் சூர்யகுமார் யாதவ் மட்டுமே உள்ளார்.

இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி 13ஆவது இடத்திலும், கேஎல் ராகுல் 19ஆவது இடத்திலும், ரோஹித் சர்மா 21ஆவது இடத்திலும், இஷான் கிஷன் 33ஆவது இடத்திலும் ஹர்திக் பாண்டியா 50ஆவது இடத்திலும் உள்ளனர்.

பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியாவின் புவனேஸ்வர் குமார் 11ஆவது இடத்திற்கும், அர்ஷ்தீப் சிங் 21ஆவது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர். இந்த பட்டியலில் இலங்கை வீரர் ஹசரங்கா முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ரஷித் கான் (ஆஃப்கானிஸ்தான்) மற்றும் ஆதில் ரசித் (இங்கிலாந்து) உள்ளனர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News