சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது டெஸ்ட் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் எனப்படும் கிரிக்கெட் தொடரை அறிமுகம் செய்தது. அதன்படி இதுவரை இரண்டு சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் மூன்றாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது. இந்நிலையில் ரசிகர்களின் காத்திருப்புக்கு ஐசிசி இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Advertisement

அதன்படி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியின் தேதி மற்றும் இடத்தை ஐசிசி இன்று அறிவித்துள்ளது. அதன்படி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 இன் இறுதிப் போட்டியானது லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 11 முதல் 15 வரை நடைபெறும் என்றும், இப்போட்டிக்கான ரிஸர்வ் டேவாக ஜூலை 16ஆம் தேதி கடைபிடிக்கப்ப்டும் என்றும் ஐசிசி அறிவித்துள்ளது.

Advertisement

இதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி முதல் முறையாக லார்ட்ஸ் மைதானத்தில் நடத்தப்படவுள்ளது. முன்னதாக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் சீசனுக்கான இறுதிப்போட்டி சௌத்தாம்டனிலும், இரண்டாவது  சீசனுக்கான இறுதிப்போட்டி ஓவலிலும் நடத்தப்பட்டது. இரண்டு முறையும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடிய இந்திய அணி, நியூசிலாந்திடமும் மற்றும் ஆஸ்திரேலியாவிடமும் தோல்வியடைந்தது.

மேற்கொண்டு மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் இந்திய அணி விளையாடி வருகிறது. அதன்படி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. அந்தவகையில் தற்போது வரை இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இந்நிலையில் இதுகுறித்து பேசிய ஐசிசியின் நிர்வாக இயக்குனர், “ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாக மாறியுள்ளது. மேலும் 2025 சீசனுக்கான தேதிகளை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை ஈர்க்கும் டெஸ்ட் கிரிக்கெட்டின் நீடித்த ஈர்ப்புக்கு இது ஒரு சான்றாகும். மேலும் டிக்கெட்டுகளுக்கு அதிக கிராக்கி இருக்கும், எனவே அடுத்த ஆண்டு அல்டிமேட் டெஸ்டைப் பார்க்கும் வாய்ப்பைப் பெற ரசிகர்கள் தங்கள் ஆர்வத்தை இப்போதே பதிவு செய்ய ஊக்குவிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News