இன்டர்நேஷனல் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் - டெஸர்ட் வைப்பர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற துபாய் கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய டெஸர்ட் வைப்பர்ஸ் அணிக்கு ரொஹன் முஸ்தஃபா - அலெக்ஸ் ஹேல் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இதில் ஆரம்பம் முதலே அபாரமாக விளையாடிய முஸ்தஃபா அரைசதம் கடந்து அசத்தினார். அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 81 ரன்களையும் பார்ட்னர்ஷிப் முறையில் அமைத்தனர். இதில் அரைசதம் கடந்த கையோடு முஸ்தஃபா 50 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Advertisement

அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 49 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய அசாம் கான் ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் காலின் முன்ரோ 16 ரன்களிலும், ரூத்ர்ஃபோர்ட் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

இறுதியில் வநிந்து ஹசரங்கா 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆடம் ஹோஸ் 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 35 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினீஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணி 6 விக்கெடுகளை இழந்து 169 ரன்களைச் சேர்த்தது. கேப்பிட்டல்ஸ் தரப்பில் சமீரா, ஹோல்டர், ரஸா, அகிஃப் மற்றும் குகெலிஜின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பாற்றின. 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய துபாய் கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் தலா 4 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தனர். இதனையடுத்து களமிறங்கிய சாம் பில்லிங்ஸும் 6 ரன்களில் நடையைக் கட்ட, துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 56 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதேசமயம் மறுபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் டங் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 7 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 59 ரன்களில் பென் டங்க் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சிக்கந்தர் ரஸா 22 ரன்களிலும், ராகுல் சோப்ரா 4 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணைந்த ரோவ்மன் பாவெல் - ஜேசன் ஹோல்டர் இணை அதிரடியாக விளையாடி அணியை இலக்கை நோக்கி அழைத்துச்சென்றனர். 

Advertisement

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரோவ்மன் பாவெல் 40 ரன்களையும், ஜேசன் ஹோல்டர் 23 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன், 4 விக்கெட் வித்தியாசத்தில் டெஸர்ட் வைப்பர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியின் வெற்றிக்கு உதவிய பென் டங்க் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News