ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐஎல்டி20 தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 22ஆவது லீக் ஆட்டத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்த்து ஷார்ஜா வாரியர்ஸ் அணி விளையாடியது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஷார்ஜா வாரியர்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய கல்ஃப் அணிக்கு ஜேமிஸ் ஸ்மித் - கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் இணை தொடக்க கொடுத்தனர். இதில் ஜேமி ஸ்மித் 7 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய கிறிஸ் லின் அதிரடியாக விளையாடி 6 பவுண்டரி, ஒரு சிக்சர் என 45 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட, அவரைத் தொடர்ந்து ஜேம்ஸ் வின்ஸ் 20 ரன்களிலும், ஜோர்டன் காக்ஸ் 4 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். 

Advertisement

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஷிம்ரான் ஹெட்மையர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 53 ரன்களைச் சேர்த்தார். அவருக்கு துணையாக எராஸ்மஸ் 17 ரன்களையும், ஜேமி ஓவர்டன் 25 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கல்ஃப் ஜெயன்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களைச் சேர்த்தது. ஷார்ஜா அணி தரப்பில் சீன் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஷார்ஜா அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் நிரோஷன் டிக்வெல்லா, ஜோ டென்லி ஆகியோர் ரன்கள் ஏதுமின்றியும், ஜான்சன் சார்லஸ் 2 ரன்களுக்கும், சீன் வில்லியம்ஸ் 3 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த டாம் கொஹ்லர் காட்மோர் - லுயிஸ் கிரிகோரி இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

இதில் 4 பவுண்டரி, 3 சிச்கர்கள் என 39 ரன்கள் எடுத்த நிலையில் டாம் கொஹ்லர் காட்மோர் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 30 ரன்களைச் சேர்த்திருந்த லுயிஸ் கிரிகோரியும் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறவ் ஷார்ஜா வாரியர்ஸ் அணி 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன், 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஜுஹைப் சுபைர் 2 விக்கெட்டுகளையும், அயான் அஃப்சல் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 79 ரன்கள் வித்தியாசத்தி ஷார்ஜா வாரியர்ஸ் அணியை வீழ்த்தி அபார வேற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஜுஹைப் சுபைர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News