ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த இரண்டாவது சிசன் ஐஎல்டி20 லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்றுவரும் இரண்டாவது குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் மற்றும் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

Advertisement

அதன்படி களமிறகிய கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிக்கு கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் - உஸ்மான் கான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்து கொடுத்தனர். பின் 21 ரன்கள் எடுத்த நிலையில் உஸ்மான் கான் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கிறிஸ் லின் ரன்கள் ஏதுமின்றியும், ஜோர்டன் காக்ஸ் 2 ரன்களிலும், ஜேமி ஸ்மித் ரன்கள் ஏதுமின்றியும், ஷிம்ரான் ஹெட்மையர் 8 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.  அதன்பின் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேம்ஸ் வின்ஸ் அரைசதம் கடந்தார்.

Advertisement

பின் 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 58 ரன்களைச் சேர்த்த நிலையில் ஜேக்ஸ் வின்ஸும் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடைடைக் கட்டினார். அதன்பின் ஜோடி சேர்ந்த் கிறிஸ் ஜோர்டன் - ஜேமி ஓவர்டன் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.  இதில் இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்த கிறிஸ் ஜோர்டன் 30 ரன்களையும், ஜேமி ஓவர்டன் 12 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 138 ரன்களைச் சேர்த்தது.

இதையடுத்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய துபாய கேப்பிட்டல்ஸ் அணிக்கு லூயிஸ் டு ப்ளூய் - டாம் பாண்டன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியதுடன் முதல் விக்கெட்டிற்கு 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர்.

இதில் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டாம் பாண்டன் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, மறுமுனையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய லூயிஸ் டூ ப்ளூய் அரைசதம் கடந்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 63 ரன்களையும், அவருக்கு துணையாக விளையாடிய டாம் அபேல் 20 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். 

இதன்மூலம் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 15.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 9 விக்கெட் வித்தியாசத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று ஆசத்தியது. இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஐஎல்டி20 தொடரின் இறுதிப்போட்டியில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி முன்னேறி அசத்தியுள்ளது. இதையடுத்து இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணியை எதிர்த்து துபாய் கேப்பிட்டல்ஸ் அணி விளையாடவுள்ளது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News