ஐஎல்டி20 லீக் தொடரின் 2ஆவது வீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான துபாய் கேப்பிட்டல்ஸ் அணியும், ஜேம்ஸ் வின்ஸ் தலைமையிலான கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற துபாய் கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

Advertisement

அதன்படி, அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டேவிட் வார்னர் - ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் ரஹ்மனுல்லா குர்பாஸ் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய பென் டங்க் ரன்கள் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய சாம் பில்லிங்ஸ் கடந்த போட்டியைப் போல் அதிரடியாக விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடன் இருந்தது. ஆனால் அவர் 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, அணியின் கேப்டன் டேவிட் வார்னர் 21 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

Advertisement

அதனைத்தொடர்ந்து களமிறங்கிய ராகுல் சோப்ராவும் 20 ரன்களோடு பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த அதிரடி வீரர் ரோவ்மன் பாவெலும் 10 ரன்களோடு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதனால் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறியது. இருப்பினும் ஒருமுனையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிக்கந்தர் ரஸா அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 47 ரன்களைச் சேத்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களைச் சேர்த்தது. கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் கார்லோஸ் பிராத்வைட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய் களமிறங்கிய கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜேமி ஸ்மித் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் இணைந்த ஜேமஸ் வின்ஸ் - கிறிஸ் லின் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டாவது விக்கெட்டிற்கு 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் அரைசதத்தை நெருங்கிய கிறிஸ் லின் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ஜேம்ஸ் வின்ஸும் 28 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஜோர்டன் காக்ஸ் ஒருமுனையில் நின்று விளையாட, மறுபக்கம் களமிறங்கிய உஸ்மான் கான் 14, ஷிம்ரான் ஹெட்மையர் ரன்கள் ஏதுமின்றியும், கார்லோஸ் பிராத்வைட் 1, கிறிஸ் ஜோர்டன் ரன்கள் ராதுமின்றியும் என வந்த வேகத்திலேயே ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இதனால் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 119 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் உறுதிவரை களத்தில் இருந்த ஜோர்டன் காக்ஸ் 38 ரன்களையும், டொமினிக் டிரேக்ஸ் 10 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். 

இதன்மூலம் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 18.4 ஓவர்களில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் துபாய் கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றிபெற்றது. துபாய் கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் வாண்டர் மெர்வ் 3 விக்கெட்டுகளையும், சிக்கந்தர் ரஸா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இப்போட்டியில் துபாய் கேப்பிட்டல்ஸுக்காக விளையாடிய சிக்கந்தர் ரஸா பேட்டிங்கில் 47 ரன்களையும், பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News