தான் மெதுவாக பந்து வீசி கொள்கிறேன் - ஜஸ்ப்ரித் பும்ரா!

Updated: Wed, Feb 22 2023 12:25 IST
‘I'm physically exhausted and mentally drained’ – R Sridhar shares fascinating anecdote involving Ja (Image Source: Google)

நட்சத்திர கிரிக்கெட் வீரர் பும்ரா தற்போது காயம் காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார். டி20 உலக கோப்பை  தொடருக்கு முன்பு ஏற்பட்ட காயத்தால் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இந்த நிலையில் முழு உடல் தகுதியை பும்ரா இன்னும் நூறு சதவீதம் எட்டவில்லை. தற்போது பும்ரா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் அவர் நேரடியாக ஐபிஎல் தொடரில் தான் விளையாடப் போகிறார். இந்த நிலையில் கடந்த 2018 -19 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டுக்கு ஒன்று என்ற கணத்தில் டெஸ்ட் தொடரை வென்றது. இந்த தொடரின் கடைசி டெஸ்டில் இந்திய அணி டிரா செய்தாலே தொடரை வென்று விடும் என்று நிலையில் இருந்தது.

அப்போது நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா பயிற்சியாளர் பரத் அவர்களிடம் தான் மெதுவாக பந்து வீசி கொள்கிறேன் என்றும் என்னால் வேகமாக வீச முடியவில்லை என்றும் கூறியுள்ளார். தான் உடல் மற்றும் மனதளவில் சோர்வாக உணர்வதாகவும் அவர் கூறியிருக்கிறார். இதற்கு பதில் அளித்துள்ள பரத், இந்தத் தொடர் பிறகு ஒரு மாதம் ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் இந்திய அணிக்கு வா. இந்த டெஸ்ட் போட்டியிலும் மெதுவாக வீசிக்கொள். ஆனால் பேட்ஸ்மேனுக்கு நீ சோர்வாக இருக்கிறாய் என்று தெரியாது.

பேட்ஸ்மேன் இந்த ஆட்டத்தில் எளிதாக எதிர்கொண்டு விட்டால் அடுத்த முறை மோதும் போது மனதளவில் அவர் வலிமையை பெற்றுவிடுவார் . பும்ராவை எதிர்கொண்டு விடலாம் என்ற எண்ணம் அவருக்கு வந்து விடும். இதுவே நீ எப்போதும் போல் வேகமாக பந்து வீசினால் உன்னை அடுத்த முறை சந்திக்கும் போதும் பும்ராவை எதிர்கொள்வது கடினம் என்ற எண்ணம் அவர்களுக்கு தோன்றும்.

என்னைக் கேட்டால் இரண்டாவது விஷயத்தை செய்தால் உனக்கு நல்லது என்று பரத் அருண் கூறியுள்ளார். பரத் அருணின் இந்த பேச்சு பும்ராவுக்கு தெளிவை கொடுத்துள்ளது. இதன் காரணமாக அவர் கடைசி டெஸ்ட்டில் சிறப்பாக பந்துவீசி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தார். இது குறித்து பரத் அருண்க்கு நன்றி தெரிவித்த பும்ரா சரியான பாடத்தை எனக்கு சொல்லிக் கொடுத்தீர்கள். இனி என் வாழ்நாளில் இந்த பாடத்தை நான் மறக்க மாட்டேன் என்று கூறி தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தை தற்போது பயிற்சியாளர் ஸ்ரீதர் பியாண்ட் கோச்சிங் என்ற புத்தகத்தில் எடுத்து கூற இருக்கிறார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை