விஜய் ஹசாரே தொடரின் அரையிறுதிக்கு கர்நாடகா, மகாராஷ்டிரா, சௌராஷ்டிரா, அசாம் அணிகள் முன்னேறின. கர்நாடகா - சௌராஷ்டிரா அணிகள் மோதிய அரையிறுதி போட்டியில் கர்நாடகாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சௌராஷ்டிரா அணி இறுதிப்போட்டிக்கு  முன்னேறியது.

Advertisement

மற்றொரு அரையிறுதி போட்டியில் மகாராஷ்டிரா - அஸாம் அணிகள் மோதின. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அஸாம் அணி பந்துவீச்சைத்  தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மகாராஷ்டிரா அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அபாரமாக விளையாடி சதமடித்தார். 

Advertisement

காலிறுதி போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடி இரட்டை சதமடித்த ருதுராஜ் கெய்க்வாட், இந்த போட்டியிலும் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் 126 பந்தில் 18 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 168 ரன்களை குவித்தார். அவருடன் இணைந்து அங்கிட் பாவ்னேவும் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். அங்கித் 110 ரன்களை குவித்தார். ருதுராஜ் மற்றும் அங்கித் ஆகிய இருவரின் அபாரமான சதங்களால் மகாராஷ்டிரா அணி 50 ஓவரில் 350 ரன்களை குவித்தது.

அதன்பின் 351 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய அசாம் அணியின் தொடக்க வீரர்கள் ஹஸாரிகா மற்றும் சாய்க்கியா (10) ஆகிய இருவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 3ஆம் வரிசையில் களமிறங்கிய ரிஷவ் தாஸ் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரியான் பராக் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

103 ரன்களுக்கே அசாம் அணி 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டபோதிலும், 5ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஷிப்சங்கர் ராய் மற்றும் ஸ்வருபம் ஆகிய இருவரும் இணைந்து பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்து, 5ஆவது விக்கெட்டுக்கு 133 ரன்களை குவித்தனர். ஷிப்சங்கர் ராய் 78 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அபாரமாக பேட்டிங் செய்து சதத்தை நெருங்கிய ஸ்வருபம் 95 ரன்களுக்கு ஆட்டமிழந்து 5 ரன்னில் சதத்தை தவறவிட்டு 45ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

கடைசி வீரர் வரை இலக்கை எட்ட அசாம் அணி கடுமையாக போராடியபோதிலும், அந்த அணியால் 50 ஓவரில் 338 ரன்கள் மட்டுமே அடிக்கமுடிந்தது. அசாம் அணி கடுமையாக போராடியபோதிலும், 12 ரன்கள் என்ற சிறிய வித்தியாசத்தில் கடைசியில் தோல்வியை தழுவியது. 

Advertisement

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மகாராஷ்டிரா அணி இறுதிப்போட்டியில் சௌராஷ்டிராவை எதிர்கொள்கிறது. டிசம்பர் 2ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கும் இறுதிப்போட்டியில் மகாராஷ்டிராவும் சௌராஷ்டிராவும் மோதுகின்றன.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News