ஐசிசியின் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் எதிர்வரும் அக்டோபர் 3ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு நேருக்கு நேர் மோதவுள்ளன. அதில் குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், குரூப் பி பிவிரில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.

Advertisement

மேற்கொண்டு இந்த உலகக்கோப்பை தொடருக்கான புதுபிக்கப்பட்ட போட்டி அட்டவணையையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சமீபத்தில் அறிவித்துள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. மேற்கொண்டு இத்தொடருக்கு தயாராகும் வகையில் அணிகளும் பிற நாடுகளுடன் இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகின்றன. 

Advertisement

அந்தவகையில் இங்கிலாந்து மகளிர் அணியும் அயர்லாந்தில் சுற்றுப்பணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. அந்தவகையில் வரும் செப்டம்பர் 07ஆம் தேதி தொடங்கி, 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும் இதில் டி20 தொடரானது பெல்ஃபெஸ்டிலும், ஒருநாள் தொடரானது டப்ளினிலும் நடைபெறவுள்ளது. ஆனால் இத்தொடருக்கான இங்கிலாந்து அணியில் வழக்கமான இங்கிலாந்து வீராங்கனைகளுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அயர்லாந்து தொடருக்கான இங்கிலாந்து ஒருநாள் அணியின் கேப்டனாக கேட் கிராஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு ஹன்னா பேக்கர், ஜியார்ஜியா டேவிஸ், சாரிஸ் பாவ்லி, ரியானா மெக்டொனால்ட், பெய்ஜ் ஸ்காஃபீல்ட், ஜியார்ஜியா ஆடம்ஸ், செரின் ஸ்மேல் உள்ளிட்ட அறிமுக வீராங்கனைகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான அயர்லாந்து மகளிர் அணியையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. 

அதன்படி இலங்கை தொடரின் போது காயமடைந்த அணியின் கேப்டன் லாரா டெலானி இன்னும் தனது காயத்தில் இருந்து குணமடையாத காரணத்தினால், கேபி லூயிஸ் அயர்லாந்து மகளிர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு இந்த அணியில் அர்லீன் கெல்லி, ஓர்லா பிரெண்டர்காஸ்ட், லியா பால், சாரா ஃபோர்ப்ஸ் மற்றும் ஏமி ஹண்டர் என நட்சத்திர வீராங்கனைகள் அனைவரும் இத்தொடரில் இடம்பிடித்துள்ளனர். 

அயர்லாந்து ஒருநாள் அணி: கேபி லூயிஸ் (கே), அலனா டால்செல், சாரா ஃபோர்ப்ஸ், ஏமி ஹண்டர், ஆர்லீன் கெல்லி, ஜோனா லௌரன், ஐமி மாகுவேர், ஜேன் மாகுவேர், லியா பால், ஓர்லா பிரெண்டர்காஸ்ட், உனா ரேமண்ட்-ஹோய், ஃபிரேயா சார்ஜென்ட், ரெபேக்கா ஸ்டோகெல், ஆலிஸ் டெக்டர்

Advertisement

அயர்லாந்து டி20 அணி: கேபி லூயிஸ் (கே), ஏவா கேனிங், கிறிஸ்டினா கூல்டர் ரெய்லி, சாரா ஃபோர்ப்ஸ், ஏமி ஹண்டர், ஆர்லீன் கெல்லி, ஐமி மாகுவேர்,ஜேன் மாகுவேர், லியா பால், ஓர்லா பிரெண்டர்காஸ்ட், உனா ரேமண்ட்-ஹோய், ஃபிரேயா சார்ஜென்ட், ரெபேக்கா ஸ்டோகெல், ஆலிஸ் டெக்டர்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News