India Women vs West Indies Women 3rd ODI Dream11 Prediction: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவிலும் இந்திய அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. 

Advertisement

இதனையடுத்து இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை வதோதராவில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய மகளிர் அணி ஏற்கெனவே ஒருநாள் தொடரை வென்றுள்ளதால் இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற முயற்சிக்கும். அதேசமயம் மறுபக்கம் அடுத்தடுத்தபோட்டிகளில் படுதோல்வியைச் சந்தித்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இப்போட்டியிலாவது வெற்றி பெற்று ஆறுதலை தேட முயற்சிக்கும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Advertisement

IN-W vs WI-W 3rd ODI: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்: இந்திய மகளிர் vs வெஸ்ட் இண்டீஸ் மகளிர்
  • நேரம்: டிசம்பர் 29, இரவு 9.30 மணி
  • இடம்: கோடாம்பி மைதானம், வதோதரா

IN-W vs WI-W 3rd ODI Pitch Report

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான இந்த ஒருநாள் தொடரானது வதோதராவில் உள்ள கோடாம்பி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை இரண்டு சர்வதேச போட்டி மட்டுமே நடைபெற்றுள்ளது. அந்த இரண்டு போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. மேற்கொண்டு இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 336 ரன்களாக உள்ளது. இதனால் இங்கு டாஸ் வெல்லு அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

IN-W vs WI-W 3rd ODI: Where to Watch?

Advertisement

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரை ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் நேரலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

IN-W vs WI-W ODI Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 28
  • இந்திய மகளிர் - 23
  • வெஸ்ட் இண்டீஸ் மகளிர் - 05

IN-W vs WI-W ODI Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள் - ரிச்சா கோஷ், ஷமைன் காம்பேல்
  • பேட்டர்கள் - ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், கியானா ஜோசப்
  • ஆல்-ரவுண்டர்கள் - ஹீலி மேத்யூஸ் (கேப்டன்), டியான்ட்ரா டோட்டின், தீப்தி சர்மா (துணை கேப்டன்), மின்னு மணி
  • பந்து வீச்சாளர்கள் - ஸைதா ஜேம்ஸ், ரேணுகா சிங் தாக்கூர்
Advertisement

India Women vs West Indies Women 3rd ODI Probable Playing XI

India 3rd ODI Probable Playing XI: ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர் (கே), ரிச்சா கோஷ், தீப்தி ஷர்மா, சைமா தாகூர், டிடாஸ் சாது, பிரியா மிஸ்ரா, ரேணுகா தாக்கூர் சிங்

West Indies 3rd ODI Probable Playing XI : ஹீலி மேத்யூஸ் (கே), கியானா ஜோசப், ஷெமைன் காம்ப்பெல், டியாண்ட்ரா டோட்டின், ரஷாதா வில்லியம்ஸ், ஸைதா ஜேம்ஸ், ஷபிகா கஜ்னபி, ஆலியா அலீன், ஷாமிலியா கானல், அஃபி பிளெட்சர், கரிஷ்மா ராம்ஹராக்

Advertisement

IN-W vs WI-W 3rd ODI Dream11 Prediction, IN-W vs WI-W Dream11 Prediction, Today Match IN-W vs WI-W, IN-W vs WI-W ODI Series, IN-W vs WI-W Dream11 Team, Fantasy Cricket Tips, IN-W vs WI-W Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between India Women vs West Indies Women

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News