IND vs AUS, 2nd ODI: 11 ஓவர்களில் ஆட்டத்தை முடித்து பதிலடி கொடுத்தது ஆஸி!

Updated: Sun, Mar 19 2023 17:36 IST
Image Source: Google

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், 2ஆவது ஒருநாள் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் ரன்னே அடிக்காமல் மிட்செல் ஸ்டார்க்கின் பவுலிங்கில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ரோஹித் சர்மா(13), சூர்யகுமார் யாதவ்(0), கேஎல் ராகுல் (9) ஆகியோரும் மிட்செல் ஸ்டார்க்கின் வேகத்தில் வீழ்ந்தனர். இதில் சூர்யகுமார் யாதவ் முதல் போட்டியிலும் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டானார்.

இந்திய அணியின் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு, குறிப்பாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு இடது கை வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் பெரிய சிக்கல் இருக்கிறது. உலக கோப்பையை எதிர்கொள்ளும் இந்திய அணி இந்த பிரச்னையை சரி செய்தாக வேண்டும். ஹர்திக் பாண்டியா ஒரு ரன்னுக்கு ஆட்டமிழக்க நிலைத்து நின்று விளையாடிய விராட் கோலியும் 31 ரன்கள் அடித்த நிலையில் சீன் அபாட்டின் பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். 

இதையடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அக்ஸர் பட்டேல் 29 ரன்களைச் சேர்த்தார். இதனமூலம் இந்திய அணி 26 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.  ஆஸ்திரேலிய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளையும், சீன் அபேட் 3 விக்கெட்டுகளையும், நாதன் எல்லிஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

அதன்பின் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹேட் - ஷான் மார்ஷ் இணை ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தில். தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் பவுண்டரியும், சிக்சர்களுமாக பறக்கவிட்டு அரைசதம் கடந்தனர்.

இதன்மூலம் 11 ஓவர்களிலேயே ஆஸ்திரேலிய அணி இலக்கை எட்டியதுடன், 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி கடந்த தோல்விக்கு சிறப்பான பதிலடியைக் கொடுத்துள்ளது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மிட்செல் மார்ஷ் 6 பவுண்டர், 6 சிக்சர்கள் என 66 ரன்களையும், டிராவிஸ் ஹெட் 10 பவுண்டரிகளுடன் 51 ரன்களையும் சேர்த்தனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை