இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 376 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது. 

Advertisement

இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 114 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 86 ரன்களையும் சேர்த்தனர். வங்கதேச அணி தரப்பில் ஹசன் மஹ்மூத் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணியானது  பும்ரா மற்றும் அர்ஷ்தீப் ஆகியோரின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 149 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.

Advertisement

அந்த அணியில் அதிகபட்சமாகவே ஷாகிப் அல் ஹசன் 32 ரன்களைச் சேர்த்தது தான். இந்திய அணி தரப்பில் பும்ரா 4 விக்கெட்டும், அர்ஷ்தீப், ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இதில் ரோஹித் சர்மா 5 ரன்களுக்கும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்களிலும், விராட் கோலி 17 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். 

அதன்பின் இணைந்துள்ள ஷுப்மன் கில் மற்றும் ரிஷப் பந்த் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்தனர். இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்களை எடுத்துள்ளது. இந்தியா அணியில் ஷுப்மன் கில் 33 ரன்களுடனும், ரிஷப் பந்த் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதையடுத்து 302 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி நாளை நான்காம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் புதிய மைல் கல் ஒன்றை எட்டியுள்ளார். அதன்படி சர்வதேச கிரிக்கெட்டில் ஜஸ்பிரித் பும்ரா தனது 400 விக்கெட்டுகளை நிறைவுசெய்துள்ளார். இதன்மூலம் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய 6ஆவது வேகப்பந்து வீச்சாளர் எனும் பெருமையையும் ஜஸ்பிரித் பும்ரா பெற்றுள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

சர்வதேச கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள்

  • 687 - கபில் தேவ்
  • 610 - ஜாகீர் கான்
  • 551 - ஜவகல் ஸ்ரீநாத்
  • 448 - முகமது ஷமி
  • 434 - இஷாந்த் சர்மா
  • 401 - ஜஸ்பிரித் பும்ரா*

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News