IND vs BAN Match 4, Super FourCricket Tips: டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன.

Advertisement

அந்தவகையில் நாளை நடைபெறும் சூப்பர் 4 போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இரு அணிகளும் வெற்றியைப் பதிவு செய்த உத்வேகத்துடன் இந்த போட்டியை எதிர்கொள்கின்றன. இதில் வெற்றி பெறும் அணி ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பும் அதிகம் என்பதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

Advertisement

IND vs BAN: Match Details

மோதும் அணிகள் - இந்தியா vs வங்கதேசம்
இடம் - துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம், துபாய்
நேரம்- செப்டம்பர் 24, இரவு 8 மணி (இந்திய நேரப்படி)

IND vs BAN: Live Streaming Details

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரை இந்திய ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம், அதேசமயம், சோனி லிவ் ஓடிடி தளத்தில் இத்தொடர் நேரலை ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

IND vs BAN: Head-to-Head in T20Is

  • Total Matches: 17
  • India: 16
  • Bangladesh: 1
  • No Result: 0

IND vs BAN: Ground Pitch Report

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 116 டி20 சர்வதேச போட்டிகள் நடைபெற்றுள்ளன, இதில் 53 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகளும், 62 போட்டிகளில் ரன்களை சேஸிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. இது தவிர, இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 139 ரன்கள் ஆகும், அதே நேரத்தில் இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 212  ரன்கள் குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

IND vs BAN: Possible XIs

Advertisement

India: ஷுப்மான் கில், அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சகரவர்த்தி

Bangladesh: லிட்டன் தாஸ் (கேப்டன்), சைஃப் ஹாசன், தவ்ஹித் ஹிரிடோய், தன்சித் ஹசன் தமீம், ஜாக்கர் அலி, ஷமிம் ஹொசைன், மஹேதி ஹசன், ஷோரிஃபுல் இஸ்லாம், நசும் அகமது, தஸ்கின் அகமது, முஸ்தஃபிசூர் ரஹ்மான்

IND vs BAN: Player to Watch Out For

Probable Best Batter

Advertisement

நடப்பு ஆசிய கோப்பை தொடரில் அபிஷேக் சர்மா 208.43 என்ற நம்பமுடியாத ஸ்ட்ரைக் ரேட்டில் 173 ரன்கள் எடுத்துள்ளார். அவர் ஒவ்வொரு ஆட்டத்திலும் இந்தியாவுக்கு ஒரு சிறந்த தொடக்கத்தை அளித்துள்ளார். இதனால் அவர் வங்கதேசத்திற்கு எதிராகவும் கடுமையாகப் போராடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Probable Best Bowler

நடப்பு ஆசிய கோப்பை தொடரில் வருண் சக்ரவர்த்தி பெரிதள்வில் விக்கெட்டுகளை கைப்பற்றவில்லை என்றாலும், அவர் ரன்களைக் கட்டுப்படுத்தி வருகிறார். மேலும் கடந்தாண்டு வங்கதேசத்திற்கு எதிராக அவர் சிறப்பாக செயல்பட்டடுள்ளதால், இந்த போட்டியிலும் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

Today Match Prediction: ஆசிய கோப்பை தொடரில் இந்தியா அணி இதுவரை தோல்வியைத் தழுவாமல் இருப்பதால், இந்த போட்டியிலும் அவர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: LIVE Cricket Score

IND vs BAN Prediction Match 4th Super Four Asia Cup 2025, Today Match IND vs BAN, IND vs BAN Prediction, IND vs BAN Predicted XIs, Injury Update of the match between India vs Bangladesh

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News