Ind vs Eng: தொடரை வெல்லும் முனைப்போடு இந்தியா; பதிலடி கொடுக்குமா இங்கிலாந்து?
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு
அணிகள் இடையேயான 4 போட்டிகொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், 5
போட்டி கொண்ட டி20 தொடரை 3-2 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்
கடந்த 23ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 66
ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் தொடரிலும்
முன்னிலையில் உள்ளது.
இதற்கிடையில், இந்தியாஇங்கிலாந்து அணிகள் மோதும் 2ஆவது ஒருநாள் போட்டி புனேயில்
இன்று) பகலிரவு போட்டியாகநடக்கிறது. இந்த ஆட்டத்திலும் வென்று விராட் கோலி
தலைமையிலான இந்திய அணி தொடரை கைப்பற்றுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன்
எதிர்பார்க்கிறார்கள்.
இந்திய அணி
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில்
சிறப்பாக செயல்பட்டனர். அதிலும் தவான், லோகேஷ் ராகுல், கேப்டன் வீராட் கோலி,
குணால்பாண்டிய, பிரஷித் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர், புவனேஷ்வர் குமார் ஆகியோர்
திறமையை வெளிப்படுத்தி இருந்தனர்.
அதிலும் தங்களது முதல் ஆட்டத்திலேயே குணால் பாண்டியா, பிரஷித் கிருஷ்ணாவும் புதிய
சாதனை படைத்திருந்தனர். ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலகி உள்ளதால்,
அவரது இடத்தில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
சூர்யகுமார் யாதவ் அல்லது ரிஷப்பண்ட் ஆகியோரில் ஒருவர் ஸ்ரேயாஸ் ஐயர் இடத்தில் களம்
இறங்கலாம். ஆனால் ராகுல் விக்கெட் கீப்பராக பணியாற்றுவதால், ரிஷப்பண்டுக்கு வாய்ப்பு
குறைவே. ஆடுகளத்தின் தன்மையை பொறுத்து அணி நிர்வாகம் இதுகுறித்து முடிவு செய்யும்.
இங்கிலாந்து அணி
இங்கிலாந்து அணி தொடரை இழக்காமல் இருக்க இந்த ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய
கட்டாயத்தில் உள்ளது. ஏற்கனவே இந்த அணி டெஸ்ட், டி20 தொடரை இழந்ததால், இன்றையப்
போட்டியில் வெற்றிக்காக மிகவும் கடுமையாகப் போராடுவார்கள்.
இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோவ், ஜேசன் ராய், கேப்டன் மார்கன், பட்லர், மார்க் வுட், ஆதில்
ரஷீத், பென் ஸ்டோக்ஸ் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.ஆனால் அணியின் கேப்டன் ஈயான்
மோர்கன் காயம் காரணமாக தொடரிலிருந்து விளக்கியுள்ளார்.
இதனால் அணியின் கேப்டனாக ஜோஸ் பட்லர் செயல்படுவார் என இங்கிலாந்து கிரிக்கெட்
வாரியம் அறிவித்துள்ளது. இதனால் இங்கிலாந்து அணி இன்றைய போட்டியில் வெற்றிபெறுமா
என்ற ஆவலுடன் காத்திருக்கின்றன.