SA vs NZ, T20I: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் டிம் செஃபெர்ட் அரைசதம் கடந்ததுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 66 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.

Advertisement

தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிராக முத்தரப்பு டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஐந்தாவது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹராரேவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் ரஸ்ஸி வேன்டர் டுசென் மற்றும் ரீஸா ஹென்றிக்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் வேன்டர் டுசென் 14 ரன்களுடன் நடையைக் கட்டடினார்.

Advertisement

அடுத்து களமிறங்கிய ருபின் ஹர்மான் 10 ரன்களுக்கும், டெவால்ட் பிரீவிஸ் 10 ரன்களுக்கும்,  லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் ஒரு ரன்னிலும், ஆண்டில் சிமலேனும் 11 ரன்னிலும் என் அட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரர் ரீஸா ஹென்றிக்ஸ் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 41 ரன்களில் நடையைக் கட்டினார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ஜார்ஜ் லிண்டே 23 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை மட்டுமே சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் ஜேக்கப் டஃபி, மிட்செல் சான்ட்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டிம் செஃபெர்ட் மற்றும் டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் செஃபெர்ட் ஒருபக்கம் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்திய நிலையில், மறுபக்கம் டெவான் கான்வே 19 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா 3 ரன்களுக்கும், மார்க் சாப்மேன் 10 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டிம் செஃபெர்ட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

Also Read: LIVE Cricket Score

அவருடன் இணைந்த டேரில் மிட்செலும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிம் செஃபெர்ட் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 66 ரன்களையும், டேரில் மிட்செல் 20 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் நியூசிலாந்து அணி 15.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய டிம் செஃபெர்ட் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News