இங்கிலாந்து தொடரில் விராட், ரோஹித், பும்ராவுக்கு ஓய்வு?

Updated: Tue, Dec 31 2024 23:24 IST
Image Source: Google

இங்கிலாந்து அணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ள்து. அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ளது. 

இதில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜனவரி 22ஆம் தேதி தொடங்கும் நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது பிப்ரவரி 06ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. மேலும் இத்தொடருக்கான இங்கிலாந்து அணியின் கேப்டனாகவும் ஜோஸ் பட்லர் நியமிக்கப்பட்டுள்ளார். 

அதேசமயம் இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் மற்றொரு நட்சத்திர வீரரான ஜோ ரூட்டிற்கு மீண்டும் இங்கிலாந்து ஒருநாள் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர்த்து ஜோஃப்ரா ஆர்ச்சார், காயத்தில் இருந்து மீண்டுள்ள மார்க் வுட், கஸ் அட்கின்சன் பிரைடன் கார்ஸ், சாகிப் மஹ்மூத், ஜேமி ஓவர்டன் உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பிடித்துள்ளனர். 

இதையடுத்து இத்தொடருக்கான இந்திய அணியையும் பிசிசிஐ விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்டோருக்கு ஓய்வளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் மூவரும் தற்சமயம் பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றனர். 

தொடர்ந்து இவர்கள் மூவரும் விளையாடி வருவததால் பணிச்சுமை காரணமாக அவர்களுக்கு ஓய்வளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேற்கொண்டு பிப்ரவரி மாத்தில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் அவர்கள் முழு உடற்தகுதியுடன் இருப்பதை உறுதிசெய்வதன் ஒரு பகுதியாக இந்த ஓய்வானது வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இங்கிலாந்து ஒருநாள் அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஜேமி ஸ்மித், லியாம் லிவிங்ஸ்டோன், ஆதில் ரஷித், ஜோ ரூட், சாகிப் மஹ்மூத், பில் சால்ட், மார்க் வுட்.

Also Read: Funding To Save Test Cricket

இங்கிலாந்து டி20 அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன்), ரெஹான் அகமது, ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஜேமி ஸ்மித், லியாம் லிவிங்ஸ்டோன், ஆதில் ரஷித், சாகிப் மஹ்மூத், பில் சால்ட், மார்க் வுட்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை