இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டிகளிலும், இங்கிலாந்து அணி ஒரு போட்டியிலும் என வெற்றிபெற்றுள்ளன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை (பிப்.23) ராஞ்சியில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs இங்கிலாந்து
  • இடம் - ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதானம், ராஞ்சி
  • நேரம் - காலை 9.30 மணி
Advertisement

போட்டி மூன்னோட்டம்

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இத்தொடரின் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவினாலும், அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு போட்டிகளில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக விராட் கோலி, கேஎல் ராகுல், முகமது ஷமி போன்ற சீனியர் வீரர்களின்றி யஷஸ்வி ஜெய்ஸ்வால், ராஜத் பட்டிதார், சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜுரெல் போன்ற இளம் வீரர்களைக் கொண்டு இந்திய அணி வெற்றிகளை ஈட்டியுள்ளது.

அதிலும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அடுத்தடுத்த இரண்டு போட்டிகளிலும் இரட்டை சதத்தை விளாசி அசத்தினார். மேலும் தனது அறிமுக போட்டியில் அபாரமாக விளையாடிய சர்ஃப்ராஸ் கான் இரண்டு இன்னிங்ஸிலும் அரைசதம் கடந்து தனது வருகையை சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இவர்களுடன் ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜுரெல் போன்றோரும் பேட்டிங்கில் தங்களது பங்களிப்பை வாழங்கியுள்ளது அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.

மறுபக்கம் பந்துவீச்சில் ஜஸ்ப்ரித் பும்ரா தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் இங்கிலாந்து பேட்டர்களை நிலைகுலைய வைத்துள்ளார். அவருடன் முகமது சிராஜ், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு பங்களித்து வருகின்றனர். இந்நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. 

Advertisement

அதேபோல் கேஎல் ராகுலும் காயத்திலிருந்து முழுமையாக குணமடையாத காரணத்தால் நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்தும் விலகியுள்ளது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ராஜத் பட்டிதாருக்கு அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்பிற்கும் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் மறுபக்கம் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெற்றாலும், அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது. இதனால் நான்காவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே தொடரில் நீடிக்க முடியும் என்ற சூழலில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் மற்றும் சுழற்பந்து வீச்சாள ரெஹான் அஹ்மத் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு ஒல்லி ராபின்சன் மற்றும் இளம் வீரர் சோயப் பஷீர் ஆகியோருக்கு இப்போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக சோயப் பஷீர் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் இடம்பிடித்திருந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது மீண்டும் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

மறுபக்கம் இத்தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருந்த ஒல்லி ராபின்சன் முதல் மூன்று போட்டிகளுக்கான அணியில் இடம்பிடிக்காமல் இருந்து வந்தார். தற்போது நான்காவது போட்டிக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவனின் இடம்பிடித்துள்ளார். இவர்களைத் தவிர்த்து ஒல்லி போப், ஜானி பேர்ஸ்டோவ், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோ ரூட் ஆகியோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பிட்ச் ரிப்போர்ட்

இந்தியாவின் மற்ற மைதானங்களைப் போலவே ராஞ்சி மைதானமும் முதல் 2 நாட்களில் பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும். எனவே அதை பயன்படுத்தி பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே ரன்கள் எடுத்துக் கொள்வது அவசியம். அதே போல ஆரம்பக்கட்ட நாட்களில் நல்ல வேகம் மற்றும் பவுன்ஸ் இருக்கும் என்பதால் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் நிறைய விக்கெட்டுகளை எடுப்பார்கள். மேலும் இங்கு இதுவரை நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றிபெற்றுள்ளதால், டாஸ் வெல்லும் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்வார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.

Advertisement

நேரலை

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இத்தொடரை ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சியில் நேரலையில் பார்க்கலாம். அதேசயம் ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இத்தொடரை நேரலையில் ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 134
  • இந்தியா - 34
  • இங்கிலாந்து - 51
  • முடிவில்லை - 50
Advertisement

உத்தேச லெவன்

இந்தியா: ரோஹித் சர்மா (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், ராஜத் பட்டிதார், சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜுரெல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்

இங்கிலாந்து: ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் (கே), பென் ஃபோக்ஸ், சோயப் பஷீர், டாம் ஹார்ட்லி, ஒல்லி ராபின்சன், ஜேம்ஸ் ஆண்டர்சன்

Advertisement

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: துருவ் ஜுரெல்
  • பேட்டர்ஸ்: சர்ஃப்ராஸ் கான், பென் டக்கெட் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில்
  • ஆல்ரவுண்டர்கள்: ரவி அஸ்வின், ஜோ ரூட், ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள்: குல்தீப் யாதவ், ஒல்லி ராபின்சன், டாம் ஹார்ட்லி

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News