India vs Ireland Dream11 Prediction Match 8, ICC T20 World Cup 2024: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரானது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 8ஆவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள முன்னாள் சாம்பியன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை எதிர்த்து பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

IND vs IRE: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs அயர்லாந்து
  • இடம் -  நசாவ் கவுண்டி சர்வதேச மைதானம், நியூயார்க்
  • நேரம் - இரவு 8 மணி (இந்திய நேரப்படி)

IND vs IRE: Pitch Report

Advertisement

நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை எந்த ஒரு சர்வதேச போட்டிகளையும் நடத்தவில்லை, இதனால் ஆடுகளத்தின் சரியான நடத்தையை கணிப்பது கடினமாக உள்ளது. இருப்பினும், சமீபத்தில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தை பார்க்கையுல் நிச்சயம் தொடக்கத்தில் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கத்தை செலுத்த முடியும். அதுமட்டுமின்றி இங்குள்ள பவுண்டரி எல்லைகளும் பெரியது என்பதால நிச்சயம் பேட்டர்கள் ரன்களைச் சேர்க்க தடுமாறுவார். அதேசமயம் அதிரடியாக விளையாட முயற்சிக்கு வீரர்களால் ரன்களை சேர்க்க முடியும் என்பதால் நிச்சயம் பேட்டர் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

IND vs IRE: Head-to-Head

  • மோதிய போட்டிகள் - 07
  • இந்தியா - 07
  • அயர்லாந்து - 00
  • முடிவில்லை - 00

IND vs IRE: Live Streaming Details

Advertisement

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இத்தொடரை நேரலையில் காணலாம். 

India vs Ireland Predicted Teams

இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங்.

அயர்லாந்து: ஆண்ட்ரூ பால்பிர்னி, பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), லோர்கன் டக்கர், ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், கரேத் டெலானி, மார்க் அதிர், ஜோஷுவா லிட்டில் பேரி மெக்கார்த்தி, கிரேக் யங்.

IND vs IRE: Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள்: ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன்
  • பேட்டர்ஸ்: ரோஹித் சர்மா, பால் ஸ்டிர்லிங், விராட் கோலி (கேப்டன்), ஹாரி டெக்டர்
  • ஆல்-ரவுண்டர்கள்: மார்க் அதிர், ஷிவம் துபே, கர்டிஸ் கேம்பர்
  • பந்துவீச்சாளர்கள்: ஜஸ்ப்ரித் பும்ரா, குல்தீப் யாதவ் (துணைக்கேப்டன்)

India vs Ireland Fantasy Tips, IND vs IRE: Dream11 Team, India vs Ireland: Predicted XIs, IND vs IRE: Pitch Report, IND vs IRE Live Streaming Details, IND vs IRE: Head-to-Head, IND vs IRE: Dream11 Prediction match 8 ICC T20 World Cup 2024

Advertisement

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News