இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. அதன்படி மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடராக நடைபெறும் இத்தொடரானது நவம்பர் மாத இறுதியில் தொடங்குகிறது. மேலும் இத்தொடருக்கான போட்டி ஆட்டவணையும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

அதன்படி மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடராக இது நடைபெறவுள்ளது. இதன்மூலம் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளனர். அதிலும் குறிப்பாக இத்தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறும் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இந்திய ஏ அணி ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டங்களில் விளையாடவுள்ளது. அதன்படி இந்திய ஏ அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட பயிற்சி போட்டியில் விளையாடவுள்ளது. அதன்படி அக்டோபர் 31ஆம் முதல் பயிற்சி போட்டியும், நவம்பர் 07ஆம் தேதி இரண்டாவது பயிற்சி போட்டியும் நடைபெறவுள்ளது. 

இந்தியா ஏ vs ஆஸ்திரேலியா ஏ அட்டவணை

  • அக்டோபர் 31 - நவம்பர் 03 :கிரேட் பேரியர் ரீஃப் அரங்கம், மேக்கே
  • நவம்பர் 07 - 10: மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், மெல்போர்ன்   

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் போட்டி அட்டவணை

  • முதல் டெஸ்ட் - பெர்த் - நவம்பர் 22 - 26
  • இரண்டாவது டெஸ்ட் (பகலிரவு) - அடிலெய்ட் ஓவல் - டிசம்பர் 06-10
  • மூன்றாவது டெஸ்ட் - பிரிஸ்பேன் - டிசம்பர் 14-18
  • நான்காவது டெஸ்ட் (பாக்ஸிங் டே) - மெல்போர்ன் - டிசம்பர் 26-30
  • ஐந்தாவது டெஸ்ட் (புத்தாண்டு டெஸ்ட்) - சிட்னி - ஜனவரி 03-07(2025) 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News