மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

Advertisement

இதனையடுத்து, இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக நட் ஸ்கைவர் பிரண்ட் அரைசதம் எடுத்தார். அவரைத் தொடர்ந்து அந்த அணியின் எமி ஜோன்ஸ் 40 ரன்களும், கேப்டன் ஹீதர் நைட் 28 ரன்களும் எடுத்தனர். 

Advertisement

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ரேனுகா சிங் 4 ஓவர்கள் வீசி வெறும் 15 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இதனையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் ஷஃபாலி வர்மா 8 ரன்களில் ஆட்டைழக்க, பின்ன்ர் வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 11, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 4 ரன்கள் என அடுத்தது விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். 

பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்மிருதி மந்தனா - ரிச்சா கோஷ் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த ஸ்மிருதி மந்தனா 52 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து ரிச்சா கோஷ் ஒருபக்கம் அதிரடியாக விளையாட, மறுமுனையில் களமிறங்கிய வீராங்கனைகள் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் இங்கிலாந்து மகளிர் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News