ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Advertisement

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நாளை தொடங்குகிறது. நாக்பூர் போட்டியை போலவே இந்த டெஸ்டிலும் இந்தியாவின் அதிரடி தொடருமா? என்று ஆவலோடு எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

போட்டி முன்னோட்டம்

  • மோதும் அணிகள் - இந்தியா vs ஆஸ்திரேலியா
  • இடம் - அருண் ஜெட்லி மைதானம், டெல்லி
  • நேரம் - காலை 9.30 மணி

போட்டி முன்னோட்டம்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் அஸ்வின்- ரவீந்திர ஜடேஜாவின் மந்திர சுழற்பந்தில் ஆஸ்திரேலியா நிலை குலைந்தது. இந்த கூட்டணி மொத்தம் உள்ள 20 விக்கெட்டில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியது. இந்திய சுழற்பந்து வீரர்களுக்கு ஏற்ற ஆடுகளத்தில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை. இதை இந்திய அணி சரியாக பயன்படுத்திக் கொண்டது. வேகப்பந்து வீச்சில் முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

கேப்டன் ரோஹித் சர்மா நாக்பூர் டெஸ்டில் தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தார். அவர் 120 ரன்கள் குவித்து அணி வலுவான நிலையை அடைய காரணமாக திகழ்ந்தார். இதே போல ஜடேஜாவும், அக்ஷர் படேலும் ரன்களை குவித்தனர்.

Advertisement

தொடக்க வீரர் கேஎல் ராகுல் டெஸ்டில் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் டெல்லி டெஸ்டில் சிறப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் எதுவும் இருக்காது என்று தெரிகிறது. ஒருவேளை ஸ்ரேயாஸ் அய்யர் உடல் தகுதி பெற்றால் சூர்யகுமார் யாதவ் நீக்கப்படுவார்.

முதல் டெஸ்டில் 3 நாளிலே தோல்வியை தழுவியதால் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கடும் நெருக்கடியில் உள்ளது. அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். லபுசாக்னே மட்டுமே இந்திய பந்து வீச்சை சற்று சமாளித்தார். வேகப்பந்து வீரர் ஸ்டார்க் இந்த டெஸ்டில் ஆடுவது இன்னும் உறுதியாகவில்லை.

அந்த அணியின் புதுமுக வீரர் மர்பி முதல் டெஸ்டில் அபாரமாக பந்து வீசினார். 7 விக்கெட் சாய்த்து முத்திரை பதித்தார். மேலும் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இப்போட்டியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 103
  • இந்தியா - 31
  • ஆஸ்திரேலியா - 43
  • டிரா - 28
  • முடிவில்லை - 01

உத்தேச லெவன்

இந்தியா - ரோஹித் சர்மா (கே), கே.எல்.ராகுல், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ஸ்ரீகர் பாரத், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஸர் படேல், முகமது ஷமி, முகமது சிராஜ்.

Advertisement

ஆஸ்திரேலியா - டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ் (கே), நாதன் லையன், டாட் மர்ஃபி, மிட்செல் ஸ்டார்க்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - அலெக்ஸ் கேரி, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப்
  • பேட்டர்ஸ் - ஸ்ரேயாஸ் ஐயர், விராட் கோலி, மார்னஸ் லாபுஷாக்னே
  • ஆல்-ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல்
  • பந்துவீச்சாளர்கள் - முகமது ஷமி, பாட் கம்மின்ஸ், டோட் மர்ஃபி

கேப்டன் தேர்வு - ஸ்ரேயாஸ் ஐயர், விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின்
துணைக்கேப்டன் தேர்வு - அக்ஸர் படேல், டாட் மர்ஃபி, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின்

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News