IND vs AUS, 3rd ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Tue, Mar 21 2023 16:10 IST
India vs Australia, 3rd ODI – IND vs AUS Cricket Match Preview, Prediction, Head To Head, Where To W (Image Source: Google)

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 4 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மும்பையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

அதன்பின், விசாகப்பட்டினத்தில் நடந்த 2ஆவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. இந்நிலையில்  இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை  சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs ஆஸ்திரேலியா
  • இடம் - எம் ஏ சிதம்பரம் மைதானம், சென்னை
  • நேரம் - மதியம் 1.30 மணி

போட்டி முன்னோட்டம்

ஹர்திக் பாண்டியா தலைமையில் முதல் ஒருநாள் போட்டியில் போராடி வெற்றிபெற்ற இந்திய அணி, அடுத்த போட்டியில் ரோஹித் சர்மாவின் வரவால் சிறப்பான வெற்றியைப் பதிவுசெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2ஆவது போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. 117 ரன்னில் சுருண்டது பரிதாபமே. 

அதிலும் நட்சத்திர வீரர்களாக பார்க்கப்படும் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் என அனைவரும் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து நடையைக் கட்டினார். இதுதான் அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. அதிலும் டி20 கிரிக்கெட்டில் அதிரடி காட்டும் சூர்யகுமர் யாதவ் அடுத்தடுத்து முதல் பந்திலேயே விக்கெட்டுகளை இழந்துள்ளார். 

கடந்த சில மாதங்களாக முரட்டு ஃபார்மில் இருந்த ஷுப்மன் கில் இந்த சீசனில் விளையாட தடுமாறுகிறார். ஹர்திக் பாண்டியா ஒருசில ஷாட்களை மட்டும் அதிரடியாக விளையாடிவிட்டு பெவிலியனுக்கு திரும்புகிறார். விராட் கோலியும் தொடக்கத்தில் சிறப்பாக செயல்பட்டாலும், 30 ரன்களைத் தாண்டும் நிலையில் விக்கெட்டை இழந்துவிடுகிறார். இதனால் இந்திய அணி பேட்டிங்கில் சோபித்தால் மட்டுமே வெற்றி என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

பந்துவீச்சு துறையில் முகமது சிராஜ், முகமது ஷமி, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் முதல் போட்டியில் அபாரமாக செயல்பட்டாலும், இரண்டாவது போட்டியில் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் தடுமாறினர். அதன் காரணமாக அவர்களும் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மேலும் நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை பந்து வீச்சில் வலுவாக திகழ்கிறது. கடந்த ஆட்டத்தில் ஸ்டார்க் 5 விக்கெட் வீழ்த்தி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தார். இதேபோல ஆடம் ஸாம்பா, சீன் அபோட் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். டிரெவிஸ் ஹெட், மிச்சேல் மார்ஷ் கடந்த ஆட்டத்தில் சிறப்பாக பேட்டிங் செய்தனர். இதே போல கேப்டன் ஸ்டீவ் சுமித்தும், வார்னரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரையாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற வேட்டையில் உள்ளது. மேலும் பேட்டிங் பந்துவீச்சு என இருதுறையில் அந்த அணி வலிமைமிக்க அணியாக உள்ளதால் நாளைய போட்டியில் விறுவிறுப்பு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் சேப்பாக்கம் மைதானத்தில் சுமார் 4 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இந்தப் போட்டியை எதிர்நோக்கி உள்ளனர். 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 145
  • ஆஸ்திரேலியா - 81
  • இந்தியா - 54
  • முடிவில்லை - 10

உத்தேச லெவன்

இந்தியா - ரோஹித் சர்மா (கே), ஷுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி.

ஆஸ்திரேலியா - டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித் (கே), மார்னஸ் லாபுஷாக்னே, அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஸ்டோனிஸ், சீன் அபோட், நாதன் எல்லிஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - கேஎல் ராகுல்
  • பேட்டர்ஸ் - விராட் கோலி, சுப்மான் கில், மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட்
  • ஆல்-ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா, மார்கஸ் ஸ்டோனிஸ், அக்சர் படேல்
  • பந்துவீச்சாளர்கள் - மிட்செல் ஸ்டார்க், முகமது சிராஜ், முகமது ஷமி
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை