Advertisement

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரானாது வரும் ஜூன் மாதம் முதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கு இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. மேலும் இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகியும் வருகின்றன. 

இந்நிலையில் நாளை நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் வங்கதேச அணி ஏற்கெனவே விளையாட இருந்த அமெரிக்க அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில், தனது இரண்டாவது போட்டியில் விளையாடவுள்ளது. அதேசம நடப்பு சீசனில் இந்திய அணி பங்கேற்கும் ஒரே பயிற்சி ஆட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs வங்கதேசம்
  • இடம் - நசாவ் கிரிக்கெட் மைதானம், நியூயார்க்
  • நேரம் - இரவு 8 மணி (இந்திய நேரப்ப்டி)

நேரலை

இந்தியா - வங்கதேச அணிகள் மோதும் இந்த பயிற்சி போட்டியை இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் டிஸ்னி+ஹாட்ஸ்டாரிலும் இப்போட்டியில் ரசிகர்களை நேரலையில் காணலாம்.

அணி விவரம்

இந்திய அணி: ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெயஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ஷிவம் தூபே, ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங். 

ரிஸர்வ் வீரர்கள் - ஷுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அஹ்மத், ஆவேஷ் கான்

வங்கதேச அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கே), தஸ்கின் அகமது, லிட்டன் தாஸ், சௌமியா சர்க்கார், தன்சித் ஹசன், ஷாகிப் அல் ஹசன், தவ்ஹித் ஹிரிடோய், மஹ்முதுல்லா, ஜகார் அலி, தன்வீர் இஸ்லாம், மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், முஸ்தஃபிசூர் ரஹ்மான், ஷோரிபுல் ரஹ்மான் , தன்சிம் ஹசன் ஷாகிப்.

ரிஸர்வ் வீரர்கள் - அஃபிஃப் ஹொசைன், ஹசன் மஹ்முத்

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News