India Women vs Sri Lanka Women Match Prediction, ICC Women's World Cup 2025: ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 13ஆவது பதிப்பானது நாளை (செப்டம்பர் 30) முதல் இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரை பிசிசிஐ நடத்துகிறது.

Advertisement

இந்நிலையில் நாளை நடைபெறும் முதல் லீக் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலன இந்திய அணியை எதிர்த்து, சமாரி அத்தபட்டு தலைமையிலான இலங்கை அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி கௌகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெற இருக்கிறது. இரு அணிகளிலும் அதிரடியான பேட்டர்கள், நட்சத்திர பந்துவீச்சாளர்கள் இருப்பதால், இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று, தொடரை வெற்றியுடன் தொடக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. 

Advertisement

IN-W vs SL-W, ICC Women's World Cup 2025: போட்டி தகவல்கள்

மோதும் அணிகள் - இந்திய மகளிர் vs இலங்கை மகளிர்
இடம் - பர்சபரா கிரிக்கெட் மைதானம், கௌகாத்தி
நேரம்- செப்டம்பர் 30, மதியம் 8.0 மணி (இந்திய நேரப்படி)

Barsapara Cricket Stadium, Guwahati Pitch Report

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி கௌகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இங்கு இதுவரை 3 சர்வதேச ஒருநாள் போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன. அதில் ஒரு போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும், 2 போட்டிகளில் ரன்களை சேஸிங் செய்த அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. இது தவிர, இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 248 ரன்கள் ஆகும், அதே நேரத்தில் இங்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 326 ரன்கள் குவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

IN-W vs SL-W T20 Head To Head Record

மோதிய போட்டிகள்- 35
இந்தியா-31
இலங்கை- 03
முடிவில்லை- 01

IN-W vs SL-W, ICC Women's World Cup 2025: Where to Watch?

Advertisement

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் 2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் வழியாக தொலைக்காட்சியில் பார்க்க முடியும். கூடுதலாக, இந்த போட்டிகளை  ஜியோஹாட்ஸ்டாரிலும் கண்டு மகிழலாம்.

IN-W vs SL-W, ICC Women's World Cup 2025: Player to Watch Out For

இந்தியாவுக்காக ஸ்மிருதி மந்தனா மற்றும் தீப்தி சர்மா நட்சத்திர வீராங்கனைகளாக இருக்கலாம். இலங்கை அணியைப் பொறுத்தவரை, சாமரி அதபட்டு மற்றும் கவிஷா தில்ஹாரி ஆகியோர் தங்கள் செயல்திறன் மூலம் ஈர்க்கப்படலாம்.

Advertisement

India Women vs Sri Lanka Women Probable Playing XI

India Women Probable Playing XI: பிரதிகா ராவல், ஸ்மிருதி மந்தனா, ஹர்லீன் தியோல், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், தீப்தி சர்மா, ராதா யாதவ்/ஸ்னே ராணா, அருந்ததி ரெட்டி, கிராந்தி கவுட், ரேணுகா சிங்.

Sri Lanka Women Probable Playing XI: ஹாசினி பெரேரா, விஷ்மி குணரத்னே, ஹர்ஷிதா சமரவிக்ரம, சாமரி அத்தபட்டு (கேப்டன்), கவிஷா தில்ஹாரி, நீலாக்ஷி டி சில்வா, அனுஷ்கா சஞ்சீவனி, தேவமி விஹங்கா, சுகந்திகா குமாரி, மல்கி மதரா, இனோகா ரணவீர.

Advertisement

India Women vs Sri Lanka Women Today's Match Prediction

2025 ஆம் ஆண்டு ஐசிசி மகளிர் உலகக் கோப்பையின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம்.

Also Read: LIVE Cricket Score

IN-W vs SL-W Match Prediction, IN-W vs SL-W Pitch Report, IN-W vs SL-W Predicted XIs, ICC Women's World Cup 2025, Today's Match IN-W vs SL-W, IN-W vs SL-W Prediction, Today Match Prediction, Today Cricket Match, Playing XI, Pitch Report, India Women vs Sri Lanka Women

Advertisement

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News