சாம்பியன்ஸ் கோப்பை 2025: இந்திய ஒருநாள் அணி நாளை அறிவிப்பு!

Updated: Fri, Jan 17 2025 19:19 IST
Image Source: Google

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. புள்ளிப்பட்டியளின் டாப் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மாத்தியில் அதிகரித்துள்ளன. 

இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறவுள்ளது. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. மேற்கொண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளைத் தவிர்த்து இத்தொடரில் பங்கேற்கும் மற்ற அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. 

அதேசமயம் இத்தொடருக்கான இந்திய அணியும் இந்த வார இறுதியில் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஏனெனில் இத்தொடரில் விளையாடும் இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என ரசிகர்கள் அவலுடன் காத்திருக்கின்றனர். ஏனெனில் காயம் காரணமக பும்ரா, குல்தீப் யாதவ் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா, சஞ்சு சாம்சன் அணியில் வாய்ப்பு பெறுவாரா உள்பட பல்வேறு கேள்விகள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் பிசிசிஐயின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு சனிக்கிழமை காலை மும்பையில் அணிகளைத் தேர்ந்தெடுக்கும். கூட்டம் முடிந்து அணிகள் இறுதி செய்யப்பட்டவுடன், அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் மதியம் 12:30 மணிக்கு வான்கடே மைதானத்தில் செய்தியாளர்களைச் செந்தித்து இந்திய அணியை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிலும் முக்கியமான இந்திய பத்திரிகையாளர் சந்திப்பில் அனைவரும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கும் ஒரு விஷயம் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் குல்தீப் யாதவின் உடற்தகுதி தான். ஏனெனில் நடைபெற்று முடிந்த பார்டர்ச் கவாஸ்கர் கோப்பை தொடரில் சிட்னி டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் முதுகு வலி காரணமாக பும்ரா பந்து வீசவில்லை, இது வரவிருக்கும் 50 ஓவர் போட்டிகளில் விளையாட அவரது உடற்தகுதி குறித்து கவலைகளை அதிகரித்துள்ளது.

ஏனெனில் இதற்கு முன்னரும் ஜஸ்பிரித் பும்ரா இதே பிரச்சனை காரணமாக கிரிக்கெட்டில் இருந்து 11மாதங்கள் விலகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. மறுபுறம், குல்தீப் யாதவ் அறுவை சிகிச்சை காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் இருந்து வருகிறார். தற்போது காயத்தில் இருந்து குணமடைந்து வரும் அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வருவதால், இருவரும் இந்த அணியில் இடம்பெறுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

Also Read: Funding To Save Test Cricket

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை