இந்திய அணி அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. 

Advertisement

இதில் இந்திய அணியானது 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியதுடன், இந்த டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் வகித்து வருகிறது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது கான்பூரில் உள்ள க்ரீன் பார்க் மைதானத்தில் எதிவரும் செப்டம்பர் 27ஆம் தேதி முதல் நடைபெறவுளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றாலோ அல்லது போட்டியை டிராவில் முடித்தாலும் கூட இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி அசத்தும்.

Advertisement

அதேசமயம் வங்கதேச அணியானது தொடர் இழப்பை தடுப்பதற்காக கடுமையாக போராடும் என்பதல் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. அதன்படி இந்த போட்டிக்கான இந்திய அணியில் எந்த மாற்றங்களும் செய்யப்படாமல் முதல் டெஸ்ட்டில் விளையாடிய அனைத்து வீரர்களும் இடம்பிடித்துள்ளனர். விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சர்ஃப்ராஸ் கான், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்ஸர் படேல் ஆகியோருடன் முகமது சிராஜ், ஆகாஷ் தீப் வேகப்பந்து வீச்சாளர்களுடன் இடம்பிடித்துள்ளனர்.

அதேசமயம் இந்திய அணியின் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் உள்ளூர் தொடர்களில் விளையாடி வரும் பட்சத்திலும் அவர்களுக்கு இந்த அணியிலும் இடம் கிடைக்கவில்லை. அதேசமயம் இப்போட்டியிலாவது வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய டி20 அணி கேப்டன் சூர்யகுமார் யாதவிற்கும் இடம் கிடைக்கவில்லை. மேற்கொண்டு நடைபெற்று வரும் துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் சதமடித்து அசத்திய சஞ்சு சாம்சன், அபிமன்யூ ஈஸ்வரன் உள்ளிட்டோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

இந்திய அணி: ரோஹித் சர்மா (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்ஃப்ராஸ் கான், ரிஷப் பந்த், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப் , ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தயாள்.

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

வங்கதேச டெஸ்ட் அணி: நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), ஸாத்மன் இஸ்லாம், ஜாகிர் ஹாசன், மோமினுல் ஹேக், முஸ்ஃபிக்கூர் ரஹீம், ஷகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், மெஹிதி ஹாசன் மிராஸ், ஜேக்கர் அலி, தஸ்கின் அகமது, ஹசன் மஹ்முத், நஹித் ராணா, தைஜுல் இஸ்லாம், மஹ்முதுல் ஹாசன் ஜாய், நயீம் ஹசன், காலித் அகமது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News