சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை தன் பெயரில் பதிவுசெய்துள்ளவர் ரோஹித் சர்மா. அதிலும் அதிரடியான ஆட்டத்திற்கு பெயர் போன அவர் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என அனைத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசைத்தியுள்ளார். அந்தவகையில் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல் ஒன்றை ரோஹித் சர்மா எட்டியுள்ளார். 

Advertisement

அதன்படி, நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்களைச் சேர்த்துள்ளது. இப்போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 11ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

Advertisement

இப்போட்டியில் 14 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 131 ரன்கள் எடுத்த நிலையில் ரோஹித் சர்மா விக்கெட்டை இழந்தார். இந்நிலையில் இப்போட்டியில் ரோஹித் சர்மா 3 சிக்சர்களை விளாசியதன் மூலம் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை விளாசிய இரண்டாவது வீரர் எனும் சாதனையைப் படைத்தார். முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் 78 சிக்சர்களை அடித்து இரண்டாம் இடத்தில் இருந்தார். 

இந்நிலையில் தான் ரோஹித் சர்மா இப்போட்டியில் அடித்த 3 சிக்சர்களுடன் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 80 சிக்சர்களை விளாசி அதிக சிக்சர் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இப்பட்டியளில் இந்திய அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 91 சிக்சர்களை விளாசி முதலிடத்தில் தொடர்கிறார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News