ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் எலிமினேட்டர் சுற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய தொடக்க வீரர்கள் கேப்டன் விராட் கோலி - தேவ்தத் படிக்கல் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
அதன்பின் 21 ரன்களில் படிக்கல் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஸ்ரீகர் பரத்தும் 9 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் 39 ரன்கள் எடுத்திருந்த விராட் கோலியும் சுனில் நரைனின் பந்துவீச்சில் போல்டாகினர்.
பின்னர் களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல், ஏபிடி வில்லியர்ஸ் ஆகியோரும் சுனில் நரைன் பந்துவீச்சில் நடையைக் கட்டினர். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சரிவர விளையாடமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 7 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை மட்டுமே எடுத்தது. கேகேஆர் அணி தரப்பில் சுனில் நரைன் 4 ஓவர்களை வீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.