இந்திய கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனுமானவர் கே.எல். ராகுல். இந்நிலையில் இவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. 

Advertisement

இந்நிலையில் ராகுல் கடுமையான வயிற்றுவலியால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. 

Advertisement

இதுகுறித்து பஞ்சாப் கிங்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கே.எல்.ராகுல் நேற்றிரவு கடுமையான வயிற்று வலி இருப்பதாக பஞ்சாப் கிங்ஸ் மருத்துவர்களிடம் புகார் அளித்தார். அதன்பின் அவருக்கு மருத்துவர்களின் ஆலோசனை படி மருந்துகள் வழங்கப்பட்டது. இருப்பினும் மருந்துகள் ஏதும் பலனளிக்காததால் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். 

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், கடுமையான குடல் ஒவ்வாமை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர். அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் அணியில் இணைவார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள கே.எல்.ராகுல் 331 ரன்களை சேர்த்து, சீசனில் அதிக ரன்களை குவித்தவருக்கான ஆரஞ்சு தொப்பியை தன்வசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News