ஐபிஎல் 2021: டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு!

Updated: Fri, Apr 23 2021 19:04 IST
Image Source: Google

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் மும்பை அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.

இன்றைய போட்டிக்கான மும்பை அணியில் மாற்றங்கள் ஏதுமின்றி விளையாடுகிறது. அதேசமயம் பஞ்சாப் கிங்ஸ் அணியில் முருகன் அஸ்வினுக்கு பதிலாக பிஷ்னோய் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ்: குயின்டன் டி காக், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஹார்திக் பாண்டியா, பொல்லார்ட், குர்னால் பாண்டியா, ராகுல் சாஹர், ஜெயந்த் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட்.

பஞ்சாப் கிங்ஸ்: கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல்,ஹென்ரிக்ஸ், நிக்கோலஸ் பூரன் / டேவிட் மாலன், தீபக் ஹூடா, ஷாருக் கான், ஃபேபியன் ஆலன், ரவி பிஷ்னோய், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை