ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஏப்ரல் 9ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 

Advertisement

இதில் இன்று நடைபெறும் 16ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs ராஜஸ்தான் ராயல்ஸ்
  • இடம்: எம்.ஏ.சிதம்பரம் மைதானம், சென்னை
  • நேரம் : இரவு 7.30 மணி

நேருக்கு நேர்
ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் இதுவரை 22 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் ஆர்சிபி அணி 10 முறையும், ஆர்.ஆர். அணி 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன. மேலும் இரண்டு போட்டிகள் முடிவின்றி முடிந்துள்ளது.

அணி நிலவரம்
ஆர்சிபி: ஆர்சிபி அணியை பொறுத்தவரை எந்தவொரு மாற்றமும் இன்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் சிறப்பாக உள்ளதால் அணியில் மாற்றங்கள் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்.ஆர்: ராஜஸ்தான் அணியில் இருந்து ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், லிவிங்ஸ்டோன் ஆகியோர் விலகியிருப்பது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஐந்து வெளிநாட்டு வீரர்களை மட்டுமே நம்பி ராஜஸ்தான் அணி நடப்பு சீசனை எதிர்கொள்ள உள்ளது.
 
உத்தேச அணி
ஆர்சிபி: விராட் கோலி, தேவ்தத் படிகல், சபாஷ் அஹ்மத், கிளென் மேக்ஸ்வெல், டி வில்லியர்ஸ், வாஷிங்டன் சுந்தர், டேனியல் கிறிஸ்டியன், கெய்ல் ஜெமிசன், ஹர்சல் பட்டேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சஹால்.

Advertisement

ஆர்.ஆர்: ஜோஸ் பட்லர், மனன் வோரா/ யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், டேவிட் மில்லர், ரியான் பராக், ராகுல் திவேத்தியா, ஷிவம் தூபே, கிறிஸ் மோரிஸ், முஸ்தபிசுர் ரஹ்மான், ஜெய்தேவ் உனாட்கட், சேட்டன் சக்கரியா.
 
பிளிட்ஸ்பூல் ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள்: சஞ்சு சாம்சன், டி வில்லியர்ஸ், ஜோஸ் பட்லர்
  • பேட்ஸ்மேன்கள் : விராட் கோலி, ரியான் பராக், ராஜட் படிதர்
  • ஆல்ரவுண்டர்கள்: கிளென் மேக்ஸ்வெல், கிறிஸ் மோரிஸ்
  • பவுலர்கள்: ஹர்சல் பட்டேல், முஷ்தஃபிசூர் ரஹ்மான், முகமது சிராஜ்

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News