இந்தியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 14ஆவது சீசன் கடந்த ஏப்ரல் 09 ஆம் தேதி தொடங்கியது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக பார்வையாளர்களின்றி நடத்தப்பட்ட இத்தொடரில், வீரர்கள் பயோ பபுள் முறையில் தொடரில் பங்கேற்றனர். 

Advertisement

இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்றிருக்கு வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

Advertisement

இதையடுத்து வீரர்கள் அனைவரும் தங்களது வீடுகளுக்கு திரும்ப தயாராகி வருகின்றனர். ஆனால் இத்தொடரில் பங்கேற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் தங்களது சொந்த நாடு திரும்புவதில் இன்னமும் சிக்கல் நிலவி வருகிறது. 

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள தென் ஆப்பிரிக்க வீரர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்ப அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் இந்தியாவிலிருந்து திரும்பும் வீரர்கள் அனைவரும் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவர் என்பதையும் அந்நாட்டு அரசு கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள தென் ஆப்பிரிக்க  வீரர்கள், உதவியாளர்களை சொந்த நாட்டிற்கு அழைத்து வர நாங்கள் முயன்று வருகிறோம். இருப்பினும் சொந்த நாடு திரும்பும் அனைவரும் தங்கள் வீடுகளில் கட்டாயம் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News