ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் கலந்துகொள்ள 1214 வீரர்கள் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். அணிகளின் விருப்பத்தைக் கேட்டுவிட்டு ஏலத்தில் இடம்பெறும் வீரர்களின் இறுதிப் பட்டியல் உருவாக்கப்படும். அந்தப் பட்டியல் ஏலம் நடைபெறும் சில நாள்களுக்கு முன்பு வெளியிடப்படும்.

Advertisement

கடந்த 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறும் மெகா ஏலம் என்பதால் இந்த வருட ஏலம் இரு நாள்களுக்கு நடைபெறவுள்ளது. ஐபிஎல் 2022 போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் பிப்ரவரி 12, 13 தேதிகளில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வருடம் முதல் லக்னௌ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன. பழைய 8 அணிகளும் தக்கவைத்துக் கொண்ட வீரா்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. 

இந்நிலையில் 10 அணிகளுக்கும் பிசிசிஐ அனுப்பிய வீரர்கள் பட்டியலில் பல பிரபலங்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. மிட்செல் ஸ்டார்க், சாம் கரண், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் கெயில், ஜோஃப்ரா ஆர்ச்சர், கிறிஸ் வோக்ஸ் ஆகிய டி20 பிரபலங்கள் ஏலத்தில் இடம்பெறுவதற்காகத் தங்கள் பெயரைக் கொடுக்கவில்லை. 

 

மேலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்துவது உள்பட பல காரணங்களுக்காக இவர்கள் 2022 ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்கள். 

Advertisement

அதேபோல் ரவிச்சந்திரன் அஸ்வின், டேவிட் வார்னர், டுவைன் பிராவோ ஆகியோரின் பெயர்கள் ரூ.2 கோடி அடிப்படை ஏலத்தொகை கொண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News