16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில்  இன்று நடைபெற்றுவரும் 51ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. 

Advertisement

அதன்படி குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக விருத்திமான் சஹா - ஷுப்மன் கில் இணை களமிறங்கினர். இதில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய விருத்திமான் சஹா 20 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அவரைத் தொடர்ந்து ஷுப்மன் கில்லும் அரைசதம் கடக்க அணியின் ஸ்கோரும் 140 ரன்களைத் தாண்டியது. 

Advertisement

தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய விருத்திமான் சஹா 10 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 81 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் தனது பங்கிற்கு 2 சிக்சர், ஒரு பவுண்டரி என 25 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். 

இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடி வந்த ஷுப்மன் கில் சதமடிபாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2 பவுண்டரி, 7 சிக்சர்களை விளாசி 94 ரன்களைச் சேர்த்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதேபோல் டேவிட் மில்லர் தனது பங்கிற்கு 21 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இதன்மூம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்களைச் சேர்தது. லக்னோ அணி தரப்பில் மொஹ்சின் கான், ஆவேஷ் கான் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.  

 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News