ராஜஸ்தான் ராயல்ஸை சஞ்சு சாம்சன் திறம்பட வழிநடத்தி வருகிறார் - ஆரோன் ஃபிஞ்ச் பாராட்டு!

Updated: Tue, Apr 23 2024 16:17 IST
ராஜஸ்தான் ராயல்ஸை சஞ்சு சாம்சன் திறம்பட வழிநடத்தி வருகிறார் - ஆரோன் ஃபிஞ்ச் பாராட்டு! (Image Source: Google)

 

ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியானது திலக் வர்மா, நெஹால் வதேரா ஆகியோரது சிறப்பான பேட்டிங்கின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களைச் சேர்த்த்து. இதில் அதிகபட்சமாக திலக் வர்மா 65 ரன்களை சேர்த்தார்.

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது யஷஸ்வி ஜெய்ஸ்வா, சஞ்சு சாம்சன் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதில் அதிகபட்சமாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் 104 ரன்களை குவித்தார். மேலும் இப்போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்து ராஜஸ்தான் அணி வெற்றிக்கு உதவிய சந்தீப் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் தங்களது 7ஆவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. அதன்படி அந்த அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் ஒரே ஒரு தோல்வியை மட்டுமே சந்தித்து 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் முதலிடத்தில் தொடர்கிறது. மேலும் மேற்கொண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு வெற்றியைப் பதிவுசெய்தாலும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்தாண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை திறம்பட வழிநடத்திவருவதுடன், அடுத்தடுத்து வெற்றிகளை பெற்றுத்தரும் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றனர். அந்த வகையில், நடப்பு ஐபிஎல் தொடரில் அழுத்தமான சூழல்களிலும் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை திறம்பட வழிநடத்தி வருகிறார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் பாராட்டியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “இத்தொடரில் சஞ்சு சாம்சன் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரராக தனது இன்னிங்ஸை விளையாடிவருகிறார். இதுதான் அணிக்கும் தேவை. டி20 கிரிக்கெட்டில் பேட்ஸ்மேனின் ஈகோ சில சமயங்களில் அணிக்கு என்ன தேவையோ அதைச் செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன், ஆனால் சஞ்சு சாம்சன் ஒவ்வொரு சூழ்நிலையிலும் அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதைத் துல்லியமாக செய்துவருகிறார். 

அவர் நம்பமுடியாத வகையில் தனது அணியை திறம்பட வழிநடத்தி வருகிறார் என்று நான் நினைக்கிறேன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அழுத்தத்தில் இருக்கும்போது எவ்வளவு அமைதியாக இருக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்கலாம். ஏனெனில் அவர்கள் இத்தொடரில் குஜராத் அணிக்கு எதிராக மட்டுமே தோல்வியைச் சந்தித்துள்ளனர். மற்றபடி தங்களது அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இதற்காக சஞ்சு சாம்சனுக்கு தான் அனைத்து நன்றியையும் தெரிவிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை