ஐபிஎல் 2023: ரிஷப் பந்திற்கு தடை; அணியை வழிநடத்தும் அக்ஸர் படேல்!

Updated: Sat, May 11 2024 20:33 IST
ஐபிஎல் 2023: ரிஷப் பந்திற்கு தடை; அணியை வழிநடத்தும் அக்ஸர் படேல்! (Image Source: Google)

 

ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 62ஆவது லீக் போட்டியில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து, ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியானது இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர். 

இப்போட்டியானது இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற மிகவும் மிக்கியமான போட்டி என்பதால் வெற்றிகாக இரு அணிகளும் கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நடப்பு ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் இரண்டு முறை பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக அபராதம் வித்திக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டுள்ளதாக குறஞ்சாட்டப்பட்டது. இதனால் மூன்றாம் முறையாக இந்த தவறை செய்த ரிஷப் பந்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிப்பதுடன், ஒரு போட்டியில் விளையாட தடையும் விதித்து பிசிசிஐ உத்திரவிட்டுள்ளது. 

இதன் காரணமாக அவர் நாளை நடைபெறும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் விளையாடமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. இதனால் நாளைய போட்டியில் யார் அணியை வழிநடத்துவார் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன. இந்நிலையில் நாளைய போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை நட்சத்திர ஆல் ரவுண்டர் அக்ஸர் படேல் வழிநடத்துவார் என அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். 

முன்னதாக கடந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸை வழிநடத்திய டேவிட் வார்னரே அணியை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அக்ஸர் படேல் அணியின் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான முக்கியமான போட்டியில் ரிஷப் பந்த் விளையாடாமல் இருப்பது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை