ஐபிஎல் 2024: தாயகம் திரும்பிய ரஹ்மனுல்லா குர்பாஸ்; கேகேஆர் அணிக்கு பின்னடைவு!

Updated: Thu, May 02 2024 15:33 IST
ஐபிஎல் 2024: தாயகம் திரும்பிய ரஹ்மனுல்லா குர்பாஸ்; கேகேஆர் அணிக்கு பின்னடைவு! (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளன. அந்தவகையில் இத்தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடிய 9 போட்டிகளில் 8 வெற்றிகளை குவித்து தங்களது பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதிசெய்துள்ளது. அதேசமயம் மீதமிருக்கும் மூன்று இடங்களுக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. 

அதில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது விளையாடிய 9 போட்டிகளில் 6 வெற்றி, 3 தோல்விகள் என 12 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் நீடித்து வருகிறது. இதனால் அந்த அணி மேற்கொண்டு இரண்டு வெற்றிகளை பெற்றாலும் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது உறுதியாகிவிடும் என்பதால், அந்த அணியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. 

அதன்படி அந்த அணி நாளைய தினம் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடவுள்ள நிலையில், அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ரஹ்மனுல்லா குர்பாஸ் தயாகம் திரும்பியுள்ளார். இதுகுறித்து வெளியான தகவலின் படி, ரஹ்மனுல்லா குர்பாஸின் தயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக அவர் தயாகம் திரும்பியுள்ளார் என்றும், இருப்பினும் அடுத்த வாரம் அவர் மீண்டும் அணியில் இணைவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில் ரஹ்மனுல்லா குர்பாஸ் தாயகம் திரும்பியுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் நடப்பு ஐபிஎல் தொடரில் அவரது இடத்தை பிலிப் சால்ட் பூர்த்தி செய்துவருவதன் விளையாவாக, இந்த சீசனில் ரஹ்மனுல்லா குர்பாஸ் இதுவரை ஒருபோட்டியில் கூட விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை