ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடியது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களைச் சேர்த்துள்ளது. 

Advertisement

இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 83 ரன்களைச் சேர்த்து அசத்தினார். அதேபோல் கேமரூன் க்ரீன் 33 ரன்களையும், கிளென் மேக்ஸ்வெல் 28 ரன்களையும் சேர்த்தனர். கேகேஆர் அணி தரப்பில் ஆண்ட்ரே ரஸல் மற்றும் ஹர்ஷித் ரானா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். 

Advertisement

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதன்மூலம் கேகேஆர் அணி முதல் 6 ஓவர்களில் 85 ரன்களை குவித்தது. இந்நிலையில் இப்போட்டியின் நடுவே விராட் கோலி மற்றும் கேகேஆர் அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் இருவரும் கட்டியணத்து நலம் விசாரித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

அதன்படி இப்போட்டியில் டைம் அவுட்டின் போது கேகேஆர் அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் களத்திற்குள் வந்து அணி வீரர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினார். அதன்பின் அங்கு பேட்டிங் செய்துகொண்டிருந்த விராட் கோலியிடம் சென்ற கம்பீர், அவரை கட்டியணைந்து சிரித்து பேசினார். இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாக கௌதம் கம்பீர் மற்றும் விராட் கோலி இருவரும் கிரிக்கெட் களத்தில் மோதுவதை வழக்கமாக வைத்திருந்தனர். அதிலும் குறிப்பாக கடந்த ஐபிஎல் சீசனின் போது லக்னோ அணியின் ஆலோசகராக செயல்பட்ட கௌதம் கம்பீர் - விராட் கோலி இருவருக்கும் இடையிலான மோதலானது பெரும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News