17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றிற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் முன்னேறியுள்ளது. அதன்பைன் தொடரின் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் கொல்கொத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளும், எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ள.

Advertisement

நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் பாதி முடிவின் போது புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் இருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது, அதன்பின் அடுத்தடுத்து தொடர்ச்சியான வெற்றிகளை குவித்து பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. அதிலும் சிஎஸ்கே அணிக்கெதிரான வாழ்வா சாவா போட்டியிலும் அபாரமாக செயல்பட்டு இந்த பிளே ஆஃப் வாய்ப்பை அந்த அணி உறுதிசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

குறிப்பாக அணியின் மற்ற வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில், முன்னாள் கேப்டன் விராட் கோலி தொடர்ச்சியாக தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 14 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி ஒரு சதம், 5 அரைசதங்களுடன் 708 ரன்களை குவித்து அதிக ரன்கள் அடித்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியையும் தன்வசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக ரன்களை விளாசிய வீரர் எனும் தனது சொந்த சாதனையை முறியடித்து விராட் கோலி புதிய சாதனை நிகழ்த்துவார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “விராட் கோலி தனது இரண்டாவது சிறந்த ஐபிஎல் சீசனைக் கொண்டாடுவதை நம்மால் பார்க்க முடிகிறது.

ஏனெனில் கடந்த 2016ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் எப்படி செயல்பட்டாரோ அதே ஃபார்மை இந்த ஐபிஎல் சீசனிலும் தொடர்ந்து வருகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, இது அவர் இந்த விளையாட்டின் மீது வைத்துள்ள ஆர்வம், அர்பணிப்பு மற்றும் காதலை இது வெளிக்காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த 2016ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் விளையாடிய கோலி, 973 ரன்களைக் குவித்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News