ஐபிஎல் தொடரின் 17அவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து பஞ்சாப் கிங்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களைச் சேர்த்தது.

Advertisement

இதில் அணியின் கேப்டன் ஷிகர் தவான் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 45 ரன்களைச் சேர்க்க, அடுத்து களமிறங்கிய பிரப்ஷிம்ரன் சிங் 25 ரன்களையும், லியாம் லிவிங்ஸ்டோன் 17 ரன்களையும், சாம் கரண் 23 ரன்களையும், ஜித்தேஷ் சர்மா 27 ரன்களையும் சேர்க்க, இறுதியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷஷாங் சிங் கடைசி ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்களை விளாசி அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார். 

Advertisement

ஆர்சிபி அணி தரப்பில் முகமது சிராஜ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து ஆர்சிபி அணி தற்போது இலக்கை துரத்தி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியின் போது ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஐபிஎல் தொடரில் புதிய சாதனை ஒன்றை பதிவுசெய்து அசத்தியுள்ளார். 

 

அதன்படி இப்போட்டியில் இரண்டு கேட்சுகளை எடுத்ததன் மூலம், ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக கேட்சுகளை பிடித்த விக்கெட் கீப்பர் அல்லாத வீரர் எனும் சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா 172 கேட்சுகளை பிடித்ததே சாதனையாக இருந்த நிலையில், 174 கேட்சுகளைப் பிடித்து விராட் கோலி முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா 167 கேட்சுகளை பிடித்து மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News