ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் ,ராஜஸ்தான் ராயல்ஸ் ம்ற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபத் அணிகள் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், மீதமுள்ள அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்காக கடுமையாக போராடி வருகின்றன. 

Advertisement

இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெற்ற 56ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின. மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க வீரர் ரியான் ரிக்கெல்டன் 2 ரன்களில் ஆட்டமிழக்க, ரோஹித் சர்மாவும் 7 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.

Advertisement

பின்னர் ஜோடி சேர்ந்த் வில் ஜேக்ஸ் - சூர்யகுமார் யாதவ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அபாரமாக விளையாடி வந்த வில் ஜேக்ஸ் அரைசதம் கடந்து அசத்தினார். மேற்கொண்டு இருவரும் இணைந்து 70 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த நிலையில் சூர்யகுமார் யாதவ் 35 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த வில் ஜேக்ஸும் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 53 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

Also Read: LIVE Cricket Score

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, நமன் தீர் ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்கா, இறுதியில் அதிரடியாக விளையாடிய கார்பின் போஷ் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 27 ரன்களைச் சேர்த்த நிலையில் ரன் அவுட்டானார். இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களைச் சேர்த்துள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ், ரஷித் கான், அர்ஷத் கான், பிரசித் கிருஷ்ணா மற்றும் ஜெரால்ட் கோட்ஸி தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News