ஆஃப்கானிஸ்தான் அணி அயர்லாந்து அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் அடங்கிய கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரான ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து வெற்றிபெற்ற நிலையில், ஒருநாள் தொடரை ஆஃப்கானிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் நாளை தொடங்கவுள்ளது. அதன்படி ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி ஷார்ஜாவில் நடைபெற்றது. 

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் பால் ஸ்டிர்லிங் - ஆண்டி பால்பிர்னி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் பால்பிர்னி 22 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த லோர்கன் டக்கரும் 4 ரன்களுக்கும், மற்றொரு தொடக்க வீரரான பால் ஸ்டிர்லிங் 25 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். 

Advertisement

அதன்பின் களமிறங்கிய ஹாரி டெக்டர் ஒருபக்கம் அதிரடியாக விளையாட, மறுபக்கம் களமிறங்கிய கர்டின்ஸ் காம்பேர், நெய்ல் ராக் ஒரு ரன்னிலும், கரெத் டெலானி 16 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆனாலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹாரி டெக்டர் அரைசதம் கடந்ததுடன், 7 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 56 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களைச் சேர்த்தது. ஆஃப்கானிஸ்தான் தரப்பில் கேப்டன் ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும், நங்கெயலியா கரோட்டே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் ரஹ்மனுல்லா குர்பாஸ் ரன்கள் ஏதுமின்றியும், செதிகுல்லா அடால் ஒரு ரன்னிலும், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த இப்ராஹிம் ஸத்ரான் - முகமது இஷாக் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது இஷாக் 32 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து இப்ராஹிம் ஸத்ரான் 11 ரன்களிலும், முகமது நபி 25 ரன்களுக்கும், அஹ்மத் அஹ்மத்ஸாய் 16 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, ஆஃப்கானிஸ்தான் அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அயர்லாந்து தரப்பில் பெஞ்சமின் வைட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் அயர்லாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றிபற்றது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News