வெஸ்ட் இண்டீஸ் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் அயர்லாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி டப்ளினில் இன்று நடைபெற்றது.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணிக்கு கேப்டன் பால் ஸ்டிர்லிங் மற்றும் ஆண்ட்ரூ பால்பிர்னி இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினார். அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பால் ஸ்டிர்லிங் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். 

Advertisement

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேட் கார்மைக்கேல் 16 ரன்களுடன் நடையைக் கட்டினார் பின்னர் பால்பிர்னியுடன் ஜோடி சேர்ந்த ஹாரி டெக்டரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆண்ட்ரூ பால்பிர்னி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 9ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார். அதேசமயம் ஹாரி டெக்டரும் தனது அரைசதத்தை பதிவுசெய்ய, இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 98 ரன்களை எட்டியது. அதன்பின் 9 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 112 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆண்ட்ரூ பால்பிர்னி தனது விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து 56 ரன்கள் எடுத்திருந்த ஹாரி டெக்டரும் நடையைக் கட்ட, பின்னர் களமிறங்கிய வீரர்களில் லோர்கன் டக்கர் 36 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அயர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கேட்டுகள் இழப்பிற்கு 303 ரன்களைக் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் தப்பில் மேத்யூ ஃபோர்ட் 3 விக்கெட்டுகளையும், அல்ஸாரி ஜோசப் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அதன்பின் கடின இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர். 

இதில் எவின் லூயிஸ் 2, கேசி கார்டி 6 ரன்னிலும், பிராண்டன் கிங் 19 ரன்னிலும், கேப்டன் ஷாய் ஹொப் 2 ரன்னிலும், அமிர் ஜங்கூ ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டை இழந்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஜஸ்டின் க்ரீவ்ஸ் மற்றும் ரோஸ்டன் சேஸ் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ரோஸ்டன் சேஸ் அரைசதம் கடந்தும் அசத்தினார். அதேசமாயம் ஜஸ்டின் க்ரீவ்ஸ் 35 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து ரோஸ்டன் சேஸ் 4 பவுண்டரி, இரண்டு சிக்ஸர் என 55 ரன்களையும் சேர்த்த கையோடு விக்கெட்டுகளை இழந்தனர். 

Also Read: LIVE Cricket Score

Advertisement

அதன்பின் களமிறங்கிய வீரர்களில் மேத்யூ ஃபோர்ட் 38 ரன்களை எடுத்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறியதால் விண்டீஸ் அணி 34.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்களை மட்டுமே எடுத்தது. அயர்லாந்து தரப்பில் பேரி மெக்கர்த்தி 4 விக்கெட்டுகளையும், ஜார்ஜ் டக்ரெல் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். இதன்மூலம் அயர்லாந்து அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News