இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 32  ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி அணியில் இடம்பெறாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. 

Advertisement

ஜஸ்பிரித் பும்ரா சிறப்பாக பந்துவீசினாலும், அவருக்கு உறுதுணையாக கூட்டணி அமைத்து மற்ற வேகப் பந்துவீச்சாளர்கள் பந்துவீசி எதிரணிக்கு அழுத்தம் கொடுக்கத் தவறினர்.  இந்த நிலையில், இந்த ஆண்டில் அணியில் உள்ள வேகப் பந்துவீச்சாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டுமென  இஃர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து பேசிய அவர், “இந்த ஆண்டில் சிறப்பான வேகப் பந்துவீச்சாளர்கள் அடங்கிய அணியை இந்தியா உருவாக்க வேண்டும். தென்னாப்பிரிக்காவில் என்ன நடந்தது என்பதை நாம் பார்த்தோம். இந்திய அணியில் முகமது ஷமி இடம்பெறவில்லை. பும்ரா அணியில் இருக்கிறார். ஆனால், அவருக்கு ஏதேனும் காயம் ஏற்பட்டால் என்ன ஆகும். 

கடந்த காலங்களில் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதை நாம் பார்த்திருக்கிறோம். அதனால், அவருக்கு காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வேகப் பந்துவீச்சாளர்கள் அதிகம் அடங்கிய ஒரு குழுவை உருவாக்காவிட்டால் நமக்கு முகமது ஷமி, பும்ரா போன்ற சிறந்த பந்துவீச்சாளர்கள் கிடைக்க மாட்டார்கள். தரமான 7-8 வேகப் பந்துவீச்சாளர்கள் அணியில் இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News